இறுதிகட்ட டெஸ்ட்டிங்கில் ஃபோர்டு ஃபிகோ க்ராஸ்ஓவர்! என்ன எதிர்பார்க்கலாம்?
Posted Date : 18:16 (04/01/2018)
Last Updated : 18:30 (04/01/2018)

 

 

ஃபியட், ஹுண்டாய், டொயோட்டா, ஹோண்டா, மாருதி சுஸூகி ஆகிய நிறுவனங்களின் வரிசையில், புதிதாக க்ராஸ்ஓவர் ஒன்றை அறிமுகப்படுத்த இருக்கிறது ஃபோர்டு. 2015-ல் வெளியான ஃபிகோதான், இந்த க்ராஸ்ஓவருக்கான அடிப்படைத் தளம். கடந்த சில நாள்களாகவே, டெஸ்ட்டிங்கில் இருக்கும் ஃபிகோ க்ராஸ்ஓவரின் ஸ்பை படங்கள், இணைய உலகில் வைரலாக வலம்வந்துக் கொண்டிருந்தன. தற்போது அந்த கார் குறித்த விபரங்கள் தெரியவந்துள்ளது.
 
காருக்குக் கரடுமுரடான லுக்கை தரும் விதமாக, கறுப்பு நிறத்தில் பாடி க்ளாடிங் இடம்பெற்றுள்ளது. இது காரைப் பார்ப்பவர்களை ஈர்க்கும்வகையில் காரோடு ஒன்றியுள்ளது ப்ளஸ். தவிர முன்பக்கத்தில் இருக்கும் மெஷ் க்ரில், ஸ்மோக் ஃப்னிஷ் ஹெட்லைட்ஸ், அகலமான ஏர் டேம் உடன்கூடிய புதிய பம்பர் என புதிய அம்சங்கள் கவர்ந்தாலும், பனி விளக்குகள் மட்டும் ஃபிகோவில் இருப்பது போன்றே உள்ளது.
 
 
 
 
மேலும் பாடி க்ளாடிங் போலவே, ரூஃப் ரயில் - கதவு பில்லர் - ரியர் வியூ மிரர்களும் கறுப்பு வண்ணத்தில் இருக்கின்றன. இதுதவிர காரின் போனட்டில் துவங்கி டெயில் கேட் வரை நீண்டிருக்கும் ரேஸிங் ஸ்ட்ரிப், செம ஸ்டைலாக முடிகிறது. இதனுடன் கதவு கைப்பிடி மற்றும் விண்டோ லைனுக்கு க்ரோம் பூச்சு பயன்படுத்தப்பட்டுள்ளது. காரின் கேபினைப் பொறுத்தமட்டில்,
 
கடந்த ஆண்டில் வெளிவந்த எக்கோஸ்போர்ட் ஃபேஸ்லிஃப்ட்டில் இருந்த டச் ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் மற்றும் இன்ஸ்ட்ரூமென்ட் கன்சோலை, ஃபிகோ க்ராஸ்ஓவரில் கட் பேஸ்ட் செய்திருக்கிறது ஃபோர்டு. இந்த காரில் புதிய 3 சிலிண்டர், 1.2 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் அறிமுகப்படுத்தப்படவுள்ளது. இந்த எடை குறைவான டிராகன் சீரிஸ் பெட்ரோல் இன்ஜின் 95bhp பவரையும், 11.5kgm டார்க்கையும் வெளிப்படுத்தும் எனத் தகவல்கள் வந்துள்ளன. 
 
 
 
 
இந்தப் புதிய இன்ஜினோடு, புதிய 5 ஸ்பீடு Getrag மேனுவல் கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது. இதன்படி பார்த்தால், ஹோண்டாவின் 1.2 லிட்டர் i-VTEC (90bhp) மற்றும் மாருதி சுஸூகியின் 1.2 லிட்டர் K-series (83bhp), ஹூண்டாயின் 1.2 லிட்டர் Kappa (83bhp) ஆகிய 4 சிலிண்டர் பெட்ரோல் இன்ஜின்களுடன் ஒப்பிட்டால், விரைவில் வரவிருக்கும் 1.2 லிட்டர் டிராகன் பெட்ரோல் இன்ஜின், அதிக பவரும் (95bhp) - குறைந்த எடையும் (3 சிலிண்டர்) கொண்டுள்ளதால்,  இதன் பர்ஃபாமென்ஸ் சிறப்பாக இருக்கும் எனத் தெரிகிறது.
 
அதற்கேற்ப ஸ்டீயரிங், சஸ்பென்ஷன் ஆகியவற்றிலும் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் இருக்கலாம். அகலமான டயர்களுக்கும் சாத்தியம் உண்டு! இந்தியாவில் தயாரிக்கும் கார்களை அமெரிக்காவுக்கும், ஐரோப்பாவுக்கும் ஏற்றுமதி செய்யப்போவதாக, எக்கோஸ்போர்ட் ஃபேஸ்லிஃப்ட்டின் அறிமுகவிழாவில் ஃபோர்டு கூறியதால், ஃபிகோ க்ராஸ்ஓவர் காருக்கும் - அடுத்து வரவுள்ள ஃபிகோ மற்றும் ஆஸ்பயர் ஃபேஸ்லிஃப்ட்டுக்கும் பலத்த எதிர்பார்ப்பு நிலவுகிறது. 

 - ரஞ்சித் ரூஸோ.
 
 
TAGS :   FORD, FIGO CROSS, FIGO, ASPIRE, CROSSOVER, FACELIFT, DRAGON, 3 CYLINDER, PETROL ENGINE, 5 SPEED MANUAL GEARBOX, BODY CLADDING, CHROME, ALLOY WHEELS, INDIA, HONDA, TOYOTA, HYUNDAI, FIAT