ஆக்ஸஸ் & கிராஸியாவுக்குப் போட்டியாக வருகிறது ஏப்ரிலியா SR 125...!
Posted Date : 15:44 (05/01/2018)
Last Updated : 15:53 (05/01/2018)

 

 

''ஸ்போட்டியான ஸ்கூட்டர் வேண்டும்'' என்பவர்களுக்கான சாய்ஸாக இருந்துவரும் ஏப்ரிலியா SR 150. இந்த ஸ்கூட்டரின் பட்ஜெட் மாடலான SR 125-யை, விரைவில் அறிமுகப்படுத்த உள்ளது பியாஜியோ. இது பார்க்க SR 150 போலவே இருந்தாலும், இதில் இருப்பது வெஸ்பா VXL 125 ஸ்கூட்டரில் இருக்கும் அதே 3 வால்வு, 125சிசி இன்ஜின்தான்; இது 10.06bhp பவர் மற்றும் 1.06kgm டார்க்கையும் வெளிப்படுத்துகிறது.
 
 
 
 
ஆகவே போட்டியாளர்களுடன் ஒப்பிடும்போது, பவர்ஃபுல்லான ஸ்கூட்டராக SR 125 திகழ்வதற்கான சாத்தியங்கள் அதிகம்! SR 150-யைப் போலவே இந்த ஸ்கூட்டரின் முன்பக்கத்திலும் டெலிஸ்கோபிக் ஃபோர்க் - டிஸ்க் பிரேக்கும், பின் பக்கத்தில் சிங்கள் ஆர்ம் சஸ்பென்ஷன் -  டிரம் பிரேக்கும் உள்ளது.
 
 
 
 
சில்வர், நீலம், பச்சை என மூன்று நிறங்களில் கிடைக்கவுள்ள SR 125-ன் உத்தேச ஆன்-ரோடு விலை, 70000 முதல் 75000 வரை இருப்பதற்கு வாய்ப்புகள் இருக்கிறது. இந்தியாவில் தற்போது விற்பனையாகிக்கொண்டிருக்கும் சுஸுகி ஆக்ஸஸ் 125, ஹோண்டா கிராஸியா, ஹோண்டா ஆக்டிவா 125, டிவிஎஸ் மற்றும் ஹீரோ ஆகிய டூ-வீலர் நிறுவனங்களின் புதிய 125சிசி ஸ்கூட்டர் ஆகியவற்றுடன் போட்டி போடுகிறது ஏப்ரிலியா SR 125.
 

கட்டுரை - ரஞ்சித் ரூஸோ; படங்கள் - Autocar India.
 
 
TAGS :   PIAGGIO, APRILIA, SR 125, SR 150, 3 VALVE, INDIA, 125CC SCOOTER, SUZUKI ACCESS, HONDA GRAZIA, ACTIVA 125, DISC BRAKES, TELESCOPIC FORK, CVT, SPORTY LOOKS.