இறுதிகட்ட டெஸ்ட்டிங்கில் கியா சோரெண்டோ... ஸ்பை படங்கள் உள்ளே!
Posted Date : 17:04 (05/01/2018)
Last Updated : 17:10 (05/01/2018)


தென் கொரியாவைச் சேர்ந்த ஹூண்டாயின் குழும நிறுவனங்களில் ஒன்றான கியா மோட்டார்ஸ், விரைவில் இந்தியாவில் கால்பதிக்க உள்ளது. எந்த கார் முதலில் வரப்போகிறது என்ற கேள்வி இருந்த நிலையில், சோரெண்டோ எஸ்யூவி அதற்கான விடையாக இருக்கும் எனத் தெரிகிறது. 2014-ம் ஆண்டில் தென் கொரியாவில் களமிறக்கப்பட்ட மூன்றாம் தலைமுறை சோரெண்டோ எஸ்யூவியைதான், கியா மோட்டார்ஸ் ஆந்திராவில் தற்போது டெஸ்ட் செய்துகொண்டிருக்கிறது.
 
 
 
 
வெளிநாடுகளில் ஒரே டாப் வேரியன்டான GT மாடலில் விற்பனை செய்யப்படும் சோரெண்டோ எஸ்யூவியில் இருப்பது, 185bhp பவரை வெளிப்படுத்தும் 2.0 லிட்டர் டீசல் இன்ஜின் - 200bhp பவரை வெளிப்படுத்தும் 2.2 லிட்டர் டீசல் இன்ஜின் - 188bhp பவரை வெளிப்படுத்தும் 2.2 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் என மூன்று இன்ஜின் ஆப்ஷன்கள் உள்ளன. அதற்கேற்ப 8 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் - 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் - 6 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் என மூன்று கியர்பாக்ஸ் ஆப்ஷன்கள் இருக்கின்றன. 
 

 
 
இந்த மூன்று இன்ஜின் - கியர்பாக்ஸ் கூட்டணியுடனும், 4 வீல் டிரைவ் சிஸ்டம் இணைக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் ஃபோக்ஸ்வாகன் டிகுவான் மற்றும் ஸ்கோடா கோடியாக் ஆகிய எஸ்யூவிகளுக்குப் போட்டியாக, சோரெண்டோ எஸ்யூவியை பொசிஷன் செய்யப்போகிறது கியா மோட்டார்ஸ். உலகளவில் நடத்தப்பட்ட க்ராஷ் டெஸ்ட் பரிசோதனைகளில், 5 ஸ்டார் வாங்கிய பெருமையும் இந்த எஸ்யூவிக்கு உள்ளது பெரிய ப்ளஸ்.
 
 
 
 
அனந்தாபுரியில் 7000 கோடி ரூபாயை முதலீடு செய்து, கார்களை உற்பத்தி செய்வதற்கான தொழிற்சாலையை உருவாக்கிக்கொண்டிருக்கிறது கியா மோட்டார்ஸ். 2019-ம் ஆண்டு, இந்தத் தொழிற்சாலை கார்களைத் தயாரிக்கத் துவங்கிவிடும் எனத் தகவல்கள் வந்துள்ளன. அடுத்த மாதம் டெல்லியில் நடைபெற உள்ள 2018 ஆட்டோ எக்ஸ்போவில், இந்தியாவில் தான் அறிமுகப்படுத்தப் போகும் மாடல்களைக் காட்சிபடுத்தும் முடிவில் இருக்கிறது. இந்நிலையில், கியா மோட்டார்ஸ் இந்தியா நிறுவனத்தின் புதிய நிர்வாக அதிகாரியாக, Kookhyun Shim நியமிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
 

கட்டுரை - ரஞ்சித் ரூஸோ; படங்கள் - Autocar India.
 
 
TAGS :   KIA MOTORS, SOUTH KOREA, INDIA, SORENTO, SUV, VOLKSWAGEN TIGUAN, SKODA KODIAQ, HYUNDAI, SANTA-FE, DIESEL, PETROL, MANUAL, AUTOMATIC, GEARBOX, 4 CYLINDER ENGINE, ANDHRA PRADESH, CAR FACTORY, CRORE.