கான்டினென்டல் GT 535 விற்பனையை நிறுத்தியது ராயல் என்ஃபீல்டு!
Posted Date : 18:04 (05/01/2018)
Last Updated : 18:22 (05/01/2018)


இந்தியாவில் தயாரிக்கப்படும் ஒரே 500சிசி கஃபே ரேஸர் பைக்கான கான்டினென்டல் GT 535-ன் விற்பனையை நிறுத்தியுள்ளது ராயல் என்ஃபீல்டு. தற்போது வரை இந்நிறுவனத்தின் விலை உயர்ந்த மாடலாக இருந்துவந்த இந்த பைக், 2013-ம் ஆண்டில் வெளிவந்தது. Paioli ட்வின் ஷாக் அப்சார்பர்கள், Brembo டிஸ்க் பிரேக்ஸ், Pirelli Sport Demon டயர்கள் என பைக்கில் அதிக வசதிகள் இருந்ததால், ஆரம்பகட்டத்தில் பைக்கர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. இருந்தாலும், கிட்டத்தட்ட இதே விலையில் வெளிவந்த கேடிஎம் டியூக் 390 பைக் காரணமாக, நாளடைவில் விற்பனையில் GT 535 சுணக்கம் கண்டது.
 
 
 
 
இதில் பொருத்தப்பட்டிருந்த சிங்கிள் சிலிண்டர், ஏர் கூல்டு 535சிசி Fi இன்ஜின் - 5-ஸ்பீடு கியர்பாக்ஸ் கூட்டணி, 29 bhp பவரையும் 4.4 kgm டார்க்கையும் வெளிப்படுத்துகிறது. கடந்த 4 மாதங்களில் மொத்தமாக 200 பைக்குகள் (ஜூலை 2017 - 76, செப்டம்பர் 2017 - 66, அக்டோபர் 2017 - 26, நவம்பர் 2017 - 3)  கூட விற்பனையாகாத நிலையில்தான், கான்டினென்டல் GT 535-ன் விற்பனையை இந்தியாவில் நிறுத்தியுள்ளது ராயல் என்ஃபீல்டு. ஆனால் வெளிநாடுகளில் இந்த பைக் ஆதிக்கம் செலுத்துவதால், இந்தியாவில் தயாரிக்கப்படும் GT 535 பைக்குகள், இனி ஏற்றுமதி மட்டுமே செய்யப்படும். 
 

 
 
கான்டினென்டல் GT 535-க்கான மாற்றாக, இந்த ஆண்டின் இறுதிக்குள் வெளிவரப்போகிறது கான்டினென்டல் GT 650. முதன்முறையாக EICMA 2017 ஆட்டோ ஷோவில் காட்சிபடுத்தப்பட்ட இந்த பைக், கடந்த ஆண்டில் இறுதியில் நடைபெற்ற IBW 2017 ஷோவில் பைக் ஆர்வலர்களின் பார்வைக்கு வைக்கப்பட்டது. இதில் புதிய Double Cradle சேஸி, வட்ட வடிவ ஹெட்லைட், அனலாக் - டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கன்சோல், முன்பக்க-பின்பக்க Brembo டிஸ்க் பிரேக்ஸ், Paioli ட்வின் ஷாக் அப்சார்பர்கள், Pirelli PHANTOM Sportscomp டயர்கள், பின்பக்க கவுல் உடனான சிங்கிள் பீஸ் சீட் என கான்டினென்டல் GT 535 பைக்கில் இருந்த பல சிறப்பம்சங்கள், ராயல் என்ஃபீல்டின் புதிய கஃபே ரேஸர் பைக்கிலும் இடம்பெற்றுள்ளது.
 
 
 
 
என்றாலும், கூடுதலாக டூயல் சேனல் ஏபிஎஸ் மற்றும் ஸ்லிப் அசிஸ்ட் க்ளட்ச் வழங்கப்பட்டிருப்பது பெரிய ப்ளஸ். தவிர, இரண்டு சிலிண்டர் இன்ஜின் என்பதால், இரட்டை எக்ஸாஸ்ட் பைப் உண்டு மக்களே! ஆம், இதில் பொருத்தப்பட்டிருக்கும் புதிய 648சிசி, பேரலல் ட்வின், ஆயில் கூல்டு Fi இன்ஜின் - 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் கூட்டணி, அதிகபட்சமாக 47bhp@7,100rpm பவரையும் - 5.2kgm@4,000rpm டார்க்கையும் வெளிப்படுத்துகிறது. ஆக கான்டினென்டல் GT 535 பைக்கின் விற்பனையை முழுவதுமாக நிறுத்திவிட்டு, மொத்த கவனத்தையும் புதிய GT 650 மீது வைக்க உள்ளது ராயல் என்ஃபீல்டு.
 

- ரஞ்சித் ரூஸோ.
 
 
TAGS :   ROYAL ENFIELD, CONTINENTAL GT 535, INDIA, CONTINENTAL GT 650, EICMA 2017, IBW 2017, CAFE RACER, ABS, SLIPPER CLUTCH, PAIOLI SUSPENSION, PIRELLI TYRES.