3 புதிய நிறத்தில் வரப்போகிறது பஜாஜ் டோமினார்; ஸ்பை படங்கள் உள்ளே!
Posted Date : 19:08 (05/01/2018)
Last Updated : 19:16 (05/01/2018)

 

300-400சிசி பைக் வாங்க நினைப்பவர்களுக்கான சாய்ஸ்களில் ஒன்றாக இருக்கும் பஜாஜ் டோமினார் D400 பைக், வெளியாகி ஒரு வருடம் ஆகிவிட்டது. இந்நிலையில் இரண்டு புதிய நிறங்களில் இந்த பைக்கை விரைவில் அறிமுகப்படுத்தவுள்ளது பஜாஜ். இந்த புதிய கலர் டோமினார் பைக்குகளின் ஸ்பை படங்கள், தற்போது இணைய உலகில் வைரலாகப் பரவி வருகின்றன. மேட் பிளாக், Gloss சிவப்பு, மிதமான நீலம் ஆகிய நிறங்களில் வரவிருக்கும் இந்த பைக்கிற்கு கூடுதல் கம்பீரம் சேர்க்கும் வகையில்,
 
 
 
 
அலாய் வீல்கள் தங்க நிறத்திலும் - இன்ஜின் கறுப்பு நிறத்திலும் இருக்கிறது. மற்றபடி டிசைன், பர்ஃபாமென்ஸ், எர்கனாமிக்ஸ், ஓட்டுதல் அனுபவத்தில் எந்த மாற்றமும் இருக்காது என்றே தெரிகிறது. மாதத்திற்கு சராசரியாக 2000 டோமினார் பைக்குகள் விற்பனையாகும் நிலையில், இதில் அதிகம் வாங்கப்படும் நிறமாக வெள்ளையும், அதற்கு அடுத்தபடியாக மேட் பிளாக் நிறமும் உள்ளது. தற்போது வெளிவரவிருக்கும் இந்தப் புதிய நிறங்கள், டோமினாரின் விற்பனையில் கணிசமான உயர்வைத் தரும் என எதிர்பார்க்கலாம். 
 

 
 
பஜாஜ் டொமினார் D400 பைக்கில் இருப்பது, 35bhp பவர் மற்றும் 3.5kgm டார்க்கை வெளிப்படுத்தக்கூடிய SOHC, 4 வால்வு, 3 ஸ்பார்க் பிளக், லிக்விட் கூலிங் கொண்ட 373.3சிசி Fi இன்ஜின் -, ஸ்லிப்பர் கிளட்ச் உடனான 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் கூட்டணி! மேலும் Beam Type பெரிமீட்டர் ஃப்ரேம், LED ஹெட்லைட், முன்பக்கத்தில் 43 மிமீ டெலிஸ்கோபிக் ஃபோர்க் - 320மிமீ டிஸ்க் பிரேக் - 110/70 R17 MRF Revz C1 ரேடியல் டியூப்லெஸ் டயர், பின்பக்கத்தில் அட்ஜஸ்டபிள் மோனோஷாக் - 230 மிமீ டிஸ்க் பிரேக் -  150/60 R17 MRF Revz C1 ரேடியல் டியூப்லெஸ் டயர்,
 
 
 
 
டிஜிட்டல் இன்ஸ்ட்ருமென்ட் க்ளஸ்டர், டூயல் சேனல் ஏபிஎஸ் என்று பிரிமியம் பைக்குகளில் இருக்கும் சிறப்பம்சங்களைக் கொண்டிருக்கிறது டோமினார். தற்போது வெள்ளை, மேட் பிளாக், அடர் நீலம், ப்ளம் ஆகிய நிறங்களில் கிடைக்கும் டோமினார் D400 ஏபிஎஸ் பைக்கின் சென்னை ஆன்-ரோடு விலை 1.76 லட்சம் ரூபாய். விரைவில் வரப்போகும் புதிய நிறங்கள், உத்தேசமாக 5000 ரூபாய் வரை விலை அதிகமாக இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 

- ரஞ்சித் ரூஸோ.
 
 
TAGS :   BAJAJ, DOMINAR, D400, ROYAL ENFIELD, CLASSIC 350, THUNDERBIRD 350, INDIA, POWER CRUISER BIKE, NAKED DESIGN, ABS, LED, PERIMETER FRAME, DISC BRAKES, LIQUID COOLING, 6 SPEED GEARBOX, SLIPPER CLUTCH, FI, 3 SPARK.