எலெக்ட்ரிக் கார்களின் கோதாவில் களமிறங்கும் ரெனோ!
Posted Date : 20:10 (06/01/2018)
Last Updated : 20:17 (06/01/2018)


நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசாங்கம், தற்போது எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கத் துவங்கியிருக்கிறது. இதன் வெளிப்பாடாக ஹூண்டாய் Kona, டாடா நானோ EV, மஹிந்திரா KUV100 NXT EV, நிஸான் Note-e Power என அடுத்தடுத்து கார் நிறுவனங்களின் எலெக்ட்ரிக் கார்களின் படையெடுப்பு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கேற்ப இதன் ஸ்பை படங்கள், இணைய உலகில் வைரலாகப் பரவிக்கொண்டிருக்கின்றது.
 
 
 
 
தற்போது இந்தப் பட்டியலில் புதிதாக இணைந்திருப்பது ரெனோ ZOE EV. பெங்களூரைச் சேர்ந்த எலெக்ட்ரிக் நிறுவனமான Lithium Urban Technologies, இந்த காரை டெஸ்ட் செய்துகொண்டிருக்கும் படங்கள் வெளிவந்துள்ளன. அடுத்த மாதம் நடைபெறவிருக்கும் 2018 டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில், அனைத்து கார் தயாரிப்பாளர்களும், தாங்கள் எதிர்காலத்தில் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்போகும் எலெக்ட்ரிக் கார்களையும், எலெக்ட்ரிக் கார் தொழில்நுட்பத்தையும் காட்சிபடுத்த உள்ளன.
 
 
 
 
இந்த ஸ்பை படத்தைப் பார்க்கும்போது, ZOE EV வாயிலாகத் தனது தொழில்நுட்பத் திறனை ரெனோ பறைசாற்ற இருப்பது தெரியவந்துள்ளது. ZOE EV-யை ஒரு முறை சார்ஜ் செய்தால், 400 கிலோ மீட்டர் தூரம் வரை செல்ல முடியும். 65 நிமிடத்தில் 80 சதவீதம் வரை சார்ஜ் ஆகும் quick charger தொழில்நுட்பம், காரில் இருக்கும் 44KW பேட்டரியில் உள்ளது. மற்ற உலக நாடுகளில் விற்கப்படும் ZOE EV-யில், 22KWh பேட்டரி - 16 இன்ச் அலாய் வீல் - Hands-Free Key Card, Start/Stop Button, லெதர் சீட்கள், ரிவர்ஸ் பார்க்கிங் கேமரா, Heated Seats போன்ற சிறப்பம்சங்கள் உள்ளன. அதிகளவில் பயன்படுத்தப்படும் 7KW சார்ஜரை கொண்டு சார்ஜ் செய்தால்,
 
 
 
 
8 முதல் 9 மணிநேரத்தில் ஃபுல் சார்ஜ் ஆகிவிடுகிறது. இதன் உதவியுடன் 300 கிலோ மீட்டர் தூரம் பயணம் செய்யலாம் என்கிறது ரெனோ. ஏற்கனவே 2014-ம் ஆண்டு நடைபெற்ற டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் ZOE EV காட்சிப்படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது. கடந்தாண்டு நடைபெற்ற பாரிஸ் மோட்டார் ஷோ மற்றும் ஜெனிவா ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிபடுத்தப்பட்ட புதிய ZOE EV, நல்ல வரவேற்பை பெற்றது. க்விட்டை அடிப்படையாகக் கொண்டு ஒரு எலெக்ட்ரிக் காரை, இந்தியா மற்றும் சீனாவுக்காகத் தயாரிக்கப்போவதாக ரெனோ முடிவுசெய்திருந்த நிலையில், அந்த வரிசையில் ZOE EV-யும் இணையும் என்பதே பலரது எதிர்பார்ப்பாக உள்ளது.
 

 - ரஞ்சித் ரூஸோ.
 
 
TAGS :   RENAULT, ZOE EV, INDIA, CHINA, LITHIUM ION, BATTERY PACK, 44KWH, 22KWH, FULL CHARGE, QUICK CHARGER, RANGE, TATA, HYUNDAI, MAHINDRA, NISSAN, ELECTRIC.