23,897 FZ-25 மற்றும் ஃபேஸர்-25 பைக்குகளை ரீ-கால் செய்யும் யமஹா!
Posted Date : 15:25 (10/01/2018)
Last Updated : 15:36 (10/01/2018)


கடந்த வருடத்தில் வெளியான FZ-25 மற்றும் ஃபேஸர் 25 பைக்குகளில் ஏற்பட்டிருக்கும் பிரச்னையை சரிசெய்ய, தானாகவே முன்வந்து ரீ-கால் செய்திருக்கிறது யமஹா. ஜனவரி 2017-க்கு பிறகு தயாரிக்கப்பட்ட யமஹாவின் இந்த 250சிசி பைக்கின் இன்ஜினில் இருக்கும் ஹெட் கவர் போல்ட், விரைவில் தளர்ந்து விடுவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. எனவே இதுவரை விற்பனை செய்யப்பட்ட 21,640 FZ-25 மற்றும் 2257 ஃபேஸர்-25 என மொத்தம் 23,897 பைக்குகளை, தனது சர்வீஸ் சென்டர்களுக்கு உடனடியாகக் கொண்டுவருமாறு இணையதளத்திலும், வாடிக்கையாளர்களுக்கு தொலைபேசி மூலமும் அழைப்பு விடுத்துள்ளது யமஹா. இது சிறிய வேலைதான் என்பதால் உங்கள் பைக்கை,
 
 
 
 
சர்வீஸ் சென்டர்களில் விரைவாகவும் இலவசமாகவும் சரிசெய்து தந்துவிடுவார்கள். இப்பிரச்சனை குறித்து யமஹாவிற்கு இதுவரை எந்தவொரு புகாரும் வரவில்லை என்றாலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகவே இந்த ரீ-கால் மேற்கொள்ளப்பட்டுள்ளது. யமஹாவின் இந்த இரு பைக்குகளிலும் இருப்பது, ஆயில் கூல்டு 249சிசி Fi இன்ஜின் - 5 ஸ்பீடு கியர்பாக்ஸ் கூட்டணி. இது 20.9bhp@8,000rpm பவரும் - 20kgm@6,000rpm டார்க்கையும் வெளிப்படுத்துகிறது. அடுத்த மாதம் நடைபெறவிருக்கும் 2018 டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில், முற்றிலும் புதிய YZF-R15 பைக் மற்றும் Nozza Grande எனும் 125சிசி ஸ்கூட்டருடன், மேம்படுத்தப்பட்ட YZF-R3 பைக்கையும் யமஹா காட்சிபடுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. 
 

 - ரஞ்சித் ரூஸோ.
 
 
TAGS :   YAMAHA, INDIA, JAPAN, FAZER, FZ 25, RECALL, HEAD COVER BOLT, SERVICE, DEALERS, SERVICE CENTERS, AUTO EXPO, 2018, YZF-R15, YZF-R3, NOZZA GRANDE, GREATER NOIDA, DELHI