கூடுதல் வாரண்டி, Byback ஆஃப்பர் வேற என்ன இருக்கு...அதிரடி பொலேரோ!
Posted Date : 11:24 (20/01/2018)
Last Updated : 11:27 (20/01/2018)
மஹிந்திரா & மஹிந்திரா நிறுவனம் தனது பொலேரோ பிக்அப் டிரக்கிற்கு புதிய சலுகைகளை அறிவித்துள்ளது. பிக்அப் டிரக்குகளில் ஏ.சி, CNG என்ஜின், ஹைப்ரிட் என்று அவ்வப்போது புதுமைகளை புகுத்திக்கொண்டிருக்கும் இந்நிறுவனம் தற்போது வாடிக்கையாளர்களை ஈர்க்கும் விதமாக புதிதாக பொலேரோ பிக்அப் டிரக் வாங்குபவர்களுக்கு அதிரடி சலுகைகளை அளிக்கவுள்ளது. 
 
 
இந்நிறுவனத்தின் அறிவிப்பின்படி பொலேரோ பிக்அப் டிரக்கு வாங்குபவர்களுக்கு 4 லட்சம் வரை பைபேக் கேரண்டி எனப்படும் சலுகையை அறிவித்துள்ளது. இச்சலுகையின் படி உங்கள் பிக்அப் டிரக்கை 4 வருடம் கழித்து விற்கும்போது உங்கள் டிரக்கிற்கு குறைந்தபட்ச தொகையாக 4 லட்சத்தை இந்நிறுவனம் அளிக்கும். மேலும் தற்போது அளித்துவரும் ஒரு ஆண்டு இலவச பராமரிப்புக்கு பதிலாக தற்போது இரண்டு ஆண்டு அல்லது 1 லட்சம் கிலோ மீட்டர் பராமரிப்பு இலவசமாகத் தரவுள்ளது.
 
பம்பர் டூ பம்பர் கேரண்டி தருவதால், மஹிந்திரா பிக்அப் டிரக் வாங்குபவர்களுக்கு இரண்டு ஆண்டுகளுக்கு எந்த செலவும் இருக்காது என்று கூறுகிறார்கள் மஹிந்திரா நிறுவனத்தார்.இவ்வளவுதான் என்று நெனச்சிடாதிங்க இன்னும் இருக்கு என்பது போல, 2 மணி நேரத்திற்குள் சர்வீஸ் என்ற எக்ப்ரஸ் சர்வீஸ் வாரண்டியும் தருகிறார்கள். இரண்டு மணி நேரம் கடந்துவிட்டால் நேரம் கூட கூட 750 ரூபாய் சர்வீஸ் மீது கேஸ்பேக் தருவார்களாம். 
 
 
கஸ்டமர்களை கைக்குள் வைத்துக்கொள்ளப் பல வழிகளை மேற்கொள்வது மட்டுமல்லாமல் ஜியோ மொபைல் போல பல அதிரடி சலுகைகள் மூலம் அதிக கஸ்டமர்களை ஈர்க்கும் முயற்சியில் உள்ளது மஹிந்திரா. 15 ஆண்டு பிக்அப் டிரக் சந்தையில் முன்னணியில் இருப்பது என்றால் சும்மாவா!
TAGS :   Mahindra bolero