மதுரையின் முதல் பி.எம்.டயிள்யூ ஷோரூம்
Posted Date : 11:38 (20/01/2018)
Last Updated : 11:38 (20/01/2018)

 மதுரையில் இருக்கும் ஒருவர் பி.எம்.டியிள்யூ கார் வாங்கவேண்டும் என்றாலோ இல்லை இருக்கும் காருக்கு சர்வீஸ் செய்ய வேண்டும் என்றாலோ கோவை வரைக்கும் போகவேண்டும் என்று இருந்த நிலையை மாற்றிவிட்டது பி.எம்.டபிள்யூ. மதுரையில் முதல்முதலாக தனது ஷோரூமை திறந்துள்ளது இந்நிறுவனம். 

 
KUN எக்ஸ்குளுசிவ் என்ற இந்த நவீன பி.எம்.டயிள்யூ ஷோரூமில் சொகுசு கார் வாடிக்கையாளருக்கான அனைத்துத் தேவைகளும் பூர்த்தி செய்யப்படுகிறது. இந்த ஷோரூமில் காரின் விற்பனை, உதிரிபாகங்கள் விற்பனை, மற்றும் பழுதுபார்த்தல் எனத் தனித்து இயங்கக்கூடியதாக உள்ளது. மேலும் இந்த ஷோரூமில் ப்ரீமியம் செல்க்ஷன் இனப்படும் வசதியும் உள்ளது. இதன் மூலம் பிம்.எம்.டபிள்யூ நிறுவனத்தின் பயன்படுத்தப்பட்ட கார்களை விற்கவும் வாங்கவும் செய்யலாம். காரை விற்கும் முன்பு இந்நிறுவனத்தின் இன்ஜினியர்கள் காரை கவனமா ஆராய்ந்து பிறகு அதற்கேற்ப விலையையும் நிர்ணயிப்பார்கள். இந்த வசதி இந்தியாவில் 13 டீலர்களிடம் மட்டுமே உள்ளது, அதில் தற்போது மதுரையும் இணைந்துள்ளது. மேலும் இந்த ஷோரூமில் மாதத்திற்கு 300 கார்களை சர்வீஸ் செய்யும் அளவிற்கு இடவசதியும், இன்ஜினியர்களும் உள்ளனர் என இந்த ஷோரூமின் முதல்வர் வசந்தி பூபதி தெரிவித்துள்ளார். 
 
 
KUN எக்ஸ்குளுசிவ் ஷோரூம் தென்மதுரையில் உள்ள விருதுநகர் சாலையில் தோப்பூர் கிராமத்தில் திறக்கப்பட்டுள்ளது. மெர்சிடீஸ் பென்ஸ், ஆடி, பி.எம்.டபிள்யூ என்று தொடர்ச்சியாக சொகுசு கார் நிறுவனங்களைக் கவர்ந்துவருகிறது மதுரை.
 
TAGS :   BMW MADURAI SHOWROOM