78.33 லட்சத்திற்கு கிடைக்கும் லேண்ட்ரோவர் வெலார்... என்ன ஸ்பெஷல்?
Posted Date : 10:22 (22/01/2018)
Last Updated : 15:49 (23/01/2018)
 
டாடா மோட்டார்ஸுக்கு சொந்தமான சொகுசு கார் நிறுவனம், ஜாகுவார் லேண்ட்ரோவர். இந்நிறுவனத்தின் புதிய  வெலார் எஸ்யூவி, 78.83 லட்ச ரூபாய்க்கு (எக்ஸ் ஷோரூம் விலை) களமிறங்கியுள்ளது. பொதுவாக எஸ்யூவிகளின் சிறப்பே மணல், மலை, காடு, ரோடு என்று எல்லா இடங்களிலும் அசராமல் பயணிப்பதுதான். ஆனால், சாலையில் பயணிக்க வடிவமைக்கப்பட்ட எஸ்யூவிதான் வெலார் என்கிறது லேண்ட் ரோவர். வெலார் எஸ்யூவியில் இருப்பது, 179bhp பவரை வெளிப்படுத்தும் 2.0 லிட்டர் டீசல் இன்ஜின், 
 
250bhp பவர் கொண்ட 2.0 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் மற்றும் 300bhp பவரைத் தரும் 3,0 லிட்டர் டீசல் இன்ஜின் என 3 இன்ஜின் ஆப்ஷனோடு அறிமுகமாகி உள்ளது. மேலும் S,SE,HSE, R-Dynamic, R-Dynamic S, R-Dynamic SE, R-Dynamic HSE என 7 வேரியண்ட்களில் வெலார் எஸ்யூவி கிடைக்கிறது. இதில் 3,0 லிட்டர் டீசல் இன்ஜினில் மட்டும் ஃபர்ஸ்ட் எடிஷன் எனும் டாப் வேரியன்ட் கூடுதலாக வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது. இந்த   வேரியன்ட் அனைத்திலும், 8 ஸ்பீடு ஆட்டோமெட்டிக் கியர்பாக்ஸ் மட்டுமே வழங்கப்படுகிறது.  
 
 
 
 
காரின் உட்புறத்தில், டேஷ்போர்டு நடுவே இரண்டு 10 இன்ச் HD டச்-ஸ்க்ரீன் பொசிஷன் செய்யப்பட்டுள்ளது. இதில் ஒன்று இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டத்திற்காகவும், மற்றொன்று க்ளைமேட் கன்ட்ரோல் போன்ற வசதிகளைக் கட்டுப்படுத்தவும் கொடுக்கப்பட்டுள்ளது. இதனால் கேபினில்  பல கன்ட்ரோல் பட்டன்கள் குறைக்கப்பட்டதால், இன்டீரியர் சிம்பிளாக உள்ளது. 
 
 
 
 
ரேஞ்ச்ரோவர் இவோக் மற்றும் டிஸ்கவரி ஸ்போர்ட் ஆகிய எஸ்யூவிகளுக்கு இடையே பொசிஷன் செய்யப்பட்டுள்ளது வெலார். இது காடுகளுக்கும் மலை மேடுகளுக்கும் சளைத்தது அல்ல என்பதைப் பறைசாற்றும் விதமாக, மலை ஏறுவதற்கு உதவும் Hill Descent Control (HDC), பல விதமான இடங்களில் பயணிக்க உதவும் Terrain Response-2 சிஸ்டம், Active Rear-Locking e-Differential என அதிக வசதிகள் உள்ளது ப்ளஸ்.
 
தவிர இந்த எஸ்யூவியை வாங்கும்போது, அவரவர்  விருப்பம்போல உள்புறம் மற்றும் வெளிப்புற நிறங்களை தேர்வுசெய்து கொள்ளலாம். ஆடி Q7, பிஎம்டபிள்யூ X5, வால்வோ XC90, மெர்சிடீஸ் பென்ஸ் GLE ஆகிய எஸ்யூவிகளுக் கார்களுக்குப் போட்டியாகக் களமிறங்கியுள்ளது, லேண்ட்ரோவர் வெலார். இதன் விலைகள் பின்வருமாறு,
 
 
 
 
 - ரஞ்சித் ரூஸோ.
 
 

 

TAGS :   LAND ROVER VELAR, AUDI Q7, BMW X5, VOLVO XC90, MERCEDES BENZ GLE, LUXURY SUV, INDIA, DIESEL, PETROL, JAGUAR, TURBO ENGINES, AUTOMATIC GEARBOX, OFF ROAD MODES.