ஹீரோ எக்ஸ்ட்ரீம் 200S... பல்ஸர் NS200, அப்பாச்சி RTR 200 4V புதிய போட்டி!
Posted Date : 12:15 (29/01/2018)
Last Updated : 12:27 (29/01/2018)


இந்தியாவில் ஏறக்குறைய 50% டூ-வீலர் சந்தையைத் தன்வசம் வைத்திருக்கும் ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம், கடந்த 2016-ம் ஆண்டு நடைபெற்ற டெல்லி ஆட்டோ எக்ஸ்போ மற்றும் 2016 மிலன் மோட்டார் ஷோவில் (EICMA) காட்சிபடுத்தப்பட்ட நேக்கட் ஸ்ட்ரீட் வகையிலான எக்ஸ்ட்ரீம் 200S பைக்கை, இந்நிறுவனம் நாளை அறிமுகப்படுத்த இருக்கிறது. இந்த பைக் பற்றிய டீசர் கட்டுரைதான் இது! 

 

 


டிசைன்: 150சிசி எக்ஸ்ட்ரீம் பைக்கைப் பின்பற்றியே வடிவமைக்கப்பட்டிருப்பது போலத் தெரிந்தாலும், சிறுத்தையை அடிப்படையாகக் கொண்டு இந்த பைக்கை டிசைன் செய்திருப்பதாக ஹீரோ தெரிவித்துள்ளது. 
போட்டியாளர்கள்: பஜாஜ் பல்ஸர் NS200 மற்றும் டிவிஎஸ் அப்பாச்சி RTR 200 4V 
இன்ஜின்: 18.34bhp பவர் மற்றும் 1.72kgm டார்க்கை வெளிப்படுத்தும் புதிய ஏர் கூல்டு, 200சிசி, கார்புரேட்டட் இன்ஜின் - 5 ஸ்பீடு கியர்பாக்ஸ் கூட்டணி. 
டெக்னிக்கல் விபரங்கள்: 142 கிலோ எடை, புதிய டயமண்ட் டைப் ஃப்ரேம், 
சஸ்பென்ஷன்: 33மிமீ டெலிஸ்கோபிக் ஃபோர்க் - மோனோஷாக் சஸ்பென்ஷன்
 
 
 
 
டயர்கள்: 17 இன்ச் MRF டீயுப்லெஸ் டயர்கள் (முன் - 80/100, பின் - 110/80), 10 ஸ்போக் அலாய் வீல்  
பிரேக்ஸ்: முன்பக்கம் 240மிமீ - பின்பக்கம் 220மிமீ டிஸ்க் பிரேக் அமைப்பு, சிங்கிள் சேனல் ஏபிஎஸ் ஆப்ஷனலாக வழங்கப்படலாம். 
வசதிகள்: அனலாக் டிஜிட்டல் இன்ஸ்ரூமென்ட் க்ளஸ்டர், LED பார்க்கிங் லைட் மற்றும் டெயில் லைட், சிங்கிள் பீஸ் சீட், ஏர் ஸ்கூப்புடன் கூடிய 12 லிட்டர் பெட்ரோல் டேங்க் & இன்ஜின் கார்டு 
முதல் தீர்ப்பு: அசத்தலான விலையில், எளிதாக ஓட்டுதலுடன் கூடிய 200சிசி பைக்காக, எக்ஸ்ட்ரீம் 200S பொசிஷன் செய்யப்படுத்துவதற்கான வாய்ப்புகள் இருக்கிறது.
 
 
 
 

- ராகுல் சிவகுரு.
 
 
 
TAGS :   HERO MOTOCORP, XTREME 200S, BAJAJ, PULSAR NS200, TVS, APACHE RTR 200 4V, XTREME, ABS, LED DRL, MRF, 5 SPEED.