விட்டாரா பிரெஸ்ஸாவுக்குப் போட்டியாக, டெஸ்ட்டிங்கில் மஹிந்திராவின் புதிய காம்பேக்ட் எஸ்யூவி! #MahindraSyouV #motorvikatan #vikatanexclusive
Posted Date : 20:11 (29/01/2018)
Last Updated : 20:38 (29/01/2018)

 

S201 என்ற புனைப் பெயரில் ஹூண்டாய் க்ரெட்டாவுக்குப் போட்டியாக, ஸாங்யாங் டிவோலியை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்படும் மிட் சைஸ் எஸ்யூவியை, யுட்டிலிட்டி வாகனங்களைத் தயாரிப்பதில் புகழ்பெற்ற மஹிந்திரா நிறுவனம், நீண்ட நாட்களாக  டெஸ்ட் செய்துகொண்டிருக்கிறது. இதைப் பற்றி, அதன் ஸ்பை படங்களுடன், நாம் முன்பே மோட்டார் விகடனில் சொல்லியிருந்தோம்.

 

 

இந்நிலையில் அந்த மிட் சைஸ் எஸ்யூவியை அடிப்படையாகக் கொண்டு, விட்டாரா பிரெஸ்ஸாவுக்குப் போட்டியாக ஒரு  காம்பேக்ட் எஸ்யூவியை, இந்நிறுவனம் தயாரிக்கப்போவது தற்போது தெரிய வந்துள்ளது. இது டெஸ்ட்டிங்கில் இருந்தபோது அதனைப் படம் பிடித்திருக்கிறார், தேனியைச் சேர்ந்த மோ.விகடன் வாசகரான பி. கார்மேகக் கண்ணன். இந்த ஸ்பை படங்களைப் பார்க்கும்போது, 4 மீட்டருக்கும் குறைவான நீளத்தில் இந்த காம்பேக்ட் எஸ்யூவி இருப்பது தெரிகிறது.

 

 

இதற்காக மிட் சைஸ் எஸ்யூவியில் பின்பக்கத்தில் இருந்து, சுமார் 200மிமீ நீளத்தை மஹிந்திரா நிறுவனம் வெட்டி எறிந்திருப்பதாகத் தகவல்கள் வந்துள்ளன. இருந்தாலும், இந்த காம்பேக்ட் எஸ்யூவியின் பாடி பேனல்கள் மற்றும் கதவுகள், அந்த மிட் சைஸ் எஸ்யூவியில் இருந்தே பெறப்பட்டுள்ளன. ஆனால் நீளம் குறைக்கப்பட்டுள்ளதால் பின்பக்க டெயில் கேட், டெயில் லைட், பின்பக்க பம்பர் எனப் பின்பகுதியின் வடிவமைப்பில் கணிசமான வித்தியாசங்களைப் பார்க்க முடிகிறது.

 

 

மேலும் இது காம்பேக்ட் எஸ்யூவி என்பதைப் பறைசாற்றும் விதமாக, அதிக கிரவுண்ட் கிளியரன்ஸ் மற்றும் அகலமான டயர்கள் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதில் தனது புதிய 1.2 லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜின் மற்றும் 1.5 லிட்டர் mHawk டர்போ டீசல் இன்ஜின் ஆப்ஷன்களைப் பொருத்தும் முடிவில் மஹிந்திரா நிறுவனம் இருக்கிறது. இந்த காம்பேக்ட் எஸ்யூவியை, 2018-ம் ஆண்டின் பிற்பாதியில், இந்நிறுவனம் விற்பனைக்குக் கொண்டுவரும் முடிவில் உள்ளது.   


- ராகுல் சிவகுரு.
 
 
TAGS :   MAHINDRA, S201, INDIA, COMPACT SUV, MIDSIZE SUV, HYUNDAI CRETA, MARUTI SUZUKI, VITARA BREZZA, DIESEL, PETROL, TURBO ENGINE, AMT, 4 METER LENGTH.