டீசர் வந்துவிட்டது... ட்ரெய்லர் எப்போ? டிவிஎஸ்ஸின் சர்ப்ரைஸ் ஸ்கூட்டர்!
Posted Date : 14:55 (31/01/2018)
Last Updated : 15:03 (31/01/2018)


 

 

சுஸூகி ஆக்ஸஸ், ஹோண்டா கிராஸியா மற்றும் ஆக்டிவா 125, வெஸ்பா LX125 போன்ற 125சிசி ஸ்கூட்டர்களுக்குப் போட்டியாக, தனது புதிய ஸ்கூட்டரை களமிறக்கும் முடிவில் இருக்கிறது டிவிஎஸ். ஒரே 110சிசி இன்ஜினை அடிப்படையாகக் கொண்டு, ஜெஸ்ட் -  ஜூபிட்டர் - வீகோ ஆகிய மாடல்களைக் களமிறக்கி, ஸ்கூட்டர் செக்மென்ட்டில் நல்ல விற்பனை எண்ணிக்கையை அடைந்திருக்கிறது. என்றாலும், முன்னே சொன்ன 125 சிசி ஸ்கூட்டர்களோடு போட்டிபோடுவது என்பது பெரும் போராட்டமாகவே இருந்தது. இதற்கான தீர்வாகத்தான், புதிதாக ஒரு 125சிசி ஸ்கூட்டரை, வருகின்ற பிப்ரவரி 5, 2017 அன்று டிவிஎஸ் அறிமுகப்படுத்த உள்ளது. தற்போது அதன் டீசரை இந்நிறுவனம் வெளியிட்டுள்ளது. 

 

 
 
கடந்த 2014-ம் ஆண்டு நடைபெற்ற டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிப்படுத்தப்பட்ட கிராஃபைட் எனும் ஸ்கூட்டர் கான்செப்ட்டின் உற்பத்தி பணிகள் துவங்கியிருப்பது, இந்த டீசர் உணர்த்தியிருக்கிறது. ஆனால் 125சிசி அல்லது 150சிசி என எந்த இன்ஜினோடு இது வரும் என்பது இன்னும் தெளிவுபடுத்தப்படவில்லை. ஏனெனில் வெஸ்பா VXL150 மற்றும் SXL150, ஏப்ரிலியா SR150 ஆகியவை மட்டுமே, தற்போது இந்தியாவில் உள்ள 150 சிசி ஸ்கூட்டர்கள். கடந்த 2016-ல் நடத்தப்பட்ட டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில், என்டார்க் எனும் ஸ்கூட்டர் கான்செப்ட் காட்சிக்கு வைக்கப்பட்டது தெரிந்ததே. எனவே வருகின்ற 2018 டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில், ஒரு 150சிசி ஸ்கூட்டரையும் டிவிஎஸ் வெளியிடுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. ஆகவே இரண்டு புதிய இன்ஜின்கள் வாயிலாக, ஸ்கூட்டர் செக்மென்ட்டில் தனது சந்தை மதிப்பை, இந்நிறுவனம் வலுப்படுத்த உள்ளது. 
 
 
 
 
இதன் ஸ்பை படங்களைப் பார்க்கும்போது, 12 இன்ச் டியூப்லெஸ் டயர்கள் - 5 ஸ்போக் அலாய் வீல் - பெட்டல் டிஸ்க் பிரேக் - LED DRL & டெயில் லைட் - டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் - இன்ஜின் கில் ஸ்விட்ச் - பாஸ் லைட் - ஸ்போர்ட்டியான எக்ஸாஸ்ட் - Bar End Weights - சீட்டுக்கு வெளியே பெட்ரோல் டேங்க் மூடி எனத் தற்போது விற்பனையில் இருக்கும் ஸ்கூட்டரில் காணக் கிடைக்காத பல வசதிகள், இந்தப் புதிய டிவிஎஸ் ஸ்கூட்டர்களில் இருப்பது பெரிய ப்ளஸ். எனவே வருகின்ற பிப்ரவரி 5-ம் தேதி, இந்நிறுவனம் என்ன ஆச்சரியங்களைத் தரப்போகிறது என்பதில் ஆவலாக இருப்பவர்கள், இந்த யூடியூப் லிங்க்கைப் பார்க்கலாம்!
 
https://www.youtube.com/watch?time_continue=12&v=5N3SL5CQJAA
 
 
 - ரஞ்சித் ரூஸோ.
 
 
TAGS :   TVS, ENTORQ, GRAPHITE, SCOOTER, 125CC, 150CC, 2018, 2016, 2014, DELHI AUTO EXPO, HONDA GRAZIA, SUZUKI ACCESS, PIAGGIO VESPA, INDIA RIVALS.