2018 டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில், டொயோட்டா வெளியிடப் போகும் புதிய செடான் இதுதான்!
Posted Date : 10:45 (05/02/2018)
Last Updated : 13:09 (05/02/2018)
 
டொயோட்டா சமூக வலைத்தளங்களில் தனது புதிய காரின் டீஸர் படங்களை வெளியிட்டுள்ளது. டீசர் படங்களைப் பார்க்கும்போது டொயோட்டா மற்ற ஆசிய நாடுகளில் விற்பனை செய்துகொண்டிருக்கும் யாரிஸ் அடிவ் (Yaris Ativ) எனும் செடன் காரை இந்தியாவிற்குக் கொண்டுவரும் முனைப்பில் உள்ளது தெரிகிறது. சிங்கப்பூர், மலேசியா போன்ற நாடுகளில் இந்த காரின் விலை குறைந்த வேரியண்ட் வியாஸ் (Vios) எனும் பெயரில் விற்பனைசெய்யப்படுகிறது. அதனால், இந்தியாவிலும் வியாஸ் என்ற பெயரில் விற்பனை செய்யப்படும் என்று நம்புகிறோம். இந்திய சந்தையில் விலையைக் கட்டுப்படுத்த மற்ற நாடுகளில் விற்பனைசெய்யப்படும் காரை விட இதில் சில வித்தியாசங்கள் இருக்கும். 
 
 
 
டொயோட்டா வியாஸ்/யாரிஸ் செடன் 4,425 மிமீ நீளம், 1,730 மிமீ அகலம் 1,475 மிமீ உயரம் மற்றும் 2,550 மிமீ வீல்பேஸ் கொண்டது. கரோலாவை போல டிசைன் இருந்தாலும் மிட் சைஸ் செடன் என்பதால் டிசைனில் சில சமரசங்கள் இருக்கும். டீசர் படங்களைப் பார்க்கும்போது, Bi-LED ப்ரொஜக்டர் லைட்டுகள், எல்.ஈ.டி DRL லைட், 16 இன்ச் அலாய் வீல் போன்றவை உள்ளன. சமீபத்தில் வெளியான ஸ்பை படங்களை வைத்துப்பார்க்கும்போது, காரின் உட்புறம் வழக்கமான டொயோட்டா கார்களை போலவே சிம்பிளாக உள்ளது. காரில் 12 இன்ச் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் மற்றும் இரண்டு வண்ண இன்டீரியர்கள் உள்ளது தெரிகிறது. 
 
 
 
 
டொயோட்டா வியாஸ், 1.5 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் மற்றும் 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் கூட்டணியோடு வெளிவரவுள்ளது. 7 ஸ்பீடு ஆட்டோமெடிக் கியர்பாக்ஸ் விலையுயர்ந்த வேரியண்டில் கிடைக்கும். தற்போது டொயோட்டாவிடம் சிறிய அளவு பி.எஸ்-6 டீசல் இன்ஜின் இல்லாதலால் டீசல் வேரியண்ட் இப்போது சாத்தியமில்லை ஆனால், எதிர்காலத்தில் வரலாம். மேலும் டொயோட்டா ஹைப்ரிட் கார் தயாரிப்பில் முன்னணி நிறுவனம் என்பதால் பெட்ரோல்-ஹைப்ரிட் வேரியண்டும் வரவாய்ப்புள்ளது. 
 
 
 
டொயோட்டாவின் வியாஸ், இந்தியாவில் உள்ள மிட்சைஸ் செடன் கார்களான ஹோண்டா சிட்டி, மாருதி சியாஸ், ஹூண்டாய் வெர்ணா கார்களோடு போட்டிபோடவுள்ளது. இந்த காரின் உத்தேச விலை 9 லட்சத்தில் இருந்து 12 லட்சம் வரை இருக்கலாம்.
 
 
 
TAGS :   Toyota Yaris