வருகிறது ராயல் என்ஃபீல்டின் புதிய பைக்குகள்!
Posted Date : 04:28 (27/02/2018)
Last Updated : 19:57 (28/02/2018)

 

ராயல் என்ஃபீல்டு நிறுவனம் தண்டர்பேர்டு 350x மற்றும் தண்டர்பேர்டு 500x எனும் இரண்டு புதிய பைக்குகளை வரும் பிப்ரவரி 28 அன்று வெளியிடவுள்ளது. டிசம்பரின் இறுதியிலேயே ஸ்பை படங்கள் மூலம் இந்த பைக்கை பற்றி நாம் அறிவித்திருந்தோம். தற்போது இந்த பைக்கின் பிரவுச்சர் படங்கள் கிடைத்துள்ளது. 

 

 
 
 
பிரவுச்சர் தகவல்களை வைத்து பார்க்கும்போது தற்போது தண்டர்பேர்டு பைக்கில் இருக்கும் அதே இன்ஜின் மற்றும் கியர்பாக்ஸை தண்டர்பர்டு X பைக்கிலும் பயன்படுத்தியிருப்பது உறுதியாகியுள்ளது. இரண்டு பைக்குகளுமே ஒரே டிசைன். இன்ஜின் மட்டுமே வேறு. பழைய தண்டர்பேர்டை ஒப்பிடுகையில் புதிய பைக்கில்  இன்ஜினை தவிர்த்து மற்ற இடங்களில் பல மாற்றங்கள் நிகழ்ந்துள்ளது. இந்த X மாடல் தண்டர்பேர்டுகளில் 9 ஸ்போக் கொண்ட அலாய் வீல் மற்றும் டியூப்லஸ் டயர்கள் இருக்கிறது. ராயல் என்ஃபீல்டி நிறுவனத்தின் முதன் அலாய் வீல் கொண்ட மாடல் இது. ஹெட்லைட்டில் DRL வருவதுடன் டெயில் லைட்டும் LED-யாக மாற்றப்பட்டுள்ளது. ஆனால், லைட்டுகளின் டிசைனில் எந்த மாற்றமும் இல்லை. இரண்டு பைக்குகளிலும் பின் பக்க டிஸ்க் பிரேக்குகள் உள்ளது. தற்போது ஏபிஎஸ் ஆப்ஷன் இல்லை, எதிர்காலத்தில் வருவதற்கு வாய்ப்புகள் உள்ளது. புதிய பைக்குளில் ஹேண்டில்பார்கள் மாற்றப்பட்டுள்ளது. முன்பு இருந்த ape hanger ஹேண்டல்பார்கள் இப்போது சிறிய flat ஹேண்டல்பார்களாக மாறியுள்ளது. 
 
 
 
 
தற்போதுள்ள தண்டர்பேர்டில் முழுவதும் க்ரோம் ஃபினிஷில் இருக்கும் இன்ஸ்ட்ரூமென்ட் கன்சோல் தற்போது மேட் ப்ளாக் பினிஷில் தரப்பட்டுள்ளது. இருந்தும் டயல்களின் நுனியில் மட்டும் க்ரோம் ஃபினிஷ் ஸ்டைலாக உள்ளது. இன்ஸ்ட்ரூமென்ட் கன்சோல் மட்டுமல்ல முன்பக்க டெலிஸ்கோப்பிக் சஸ்பன்ஷன், பின்பக்க ஷாக் அப்சார்பர்கள் மற்றும் சைலன்சருக்கும் கறுப்பு வண்ணம் பூசப்பட்டுள்ளன. புதிய பைக்கை பார்த்த உடனேயே தெரியும் முதல் பெரிய மாற்றம் இதன் சீட்டு. வழக்கமான தண்டர்பேர்டு பைக்கில் ஸ்ப்ளிட் சீட்டுகள் இருந்த நிலையில், இந்த X மாடலில் ஸ்டைலான சிங்கிள் பீஸ் சீட் பொருத்தப்பட்டுள்ளது. இதில் பேக் ரெஸ்ட் இல்லை என்றாலும், அதற்குப் பதிலாக ஸ்ப்ளிட் கிராப் ரெயில் வழங்கப்பட்டுள்ளது. இந்த பைக்குகள் Getaway Orange, Drifter Blue, Whimsical White மற்றும் Roving Red என்று நான்கு நிறங்களில் விற்பனைக்கு வரப்போகிறது. தற்போதுள்ள தண்டர்பேர்டு பைக்குகளை விட இந்த X வேரியண்ட் பைக்குகளின் விலை கூடுதலாகவே இருக்கும்.
 
 
    - ரஞ்சித் ரூஸோ; படங்கள் - rushlane.com
 
 
TAGS :   thunderbird x