களமிறங்குகிறது 2018 அப்பாச்சி RTR 200V
Posted Date : 21:58 (07/03/2018)
Last Updated : 22:02 (07/03/2018)
அப்பாச்சி RTR 200V பைக்கின் 2018 மாடலான Race Edition 2.0-வை வெளியிட்டுள்ளது டிவிஎஸ். ஏற்கனவே கார்புரேட்டர், EFI, ஏபிஎஸ் என்று தனித்தனியாக அப்டேட்டுகள் வந்துகொண்டிருந்த நிலையில் அப்பாச்சி RTR 200-ன் புதிய அப்டேட்டாக வந்துள்ளது Race Edition 2.0. புதிய அப்பாச்சியில் இருப்பது அதே 200cc சி௩்கள் சிலிண்டர் இன்ஜின்தான், பவர் மற்றும் டார்க்கில் எந்த மாற்றமும் இல்லை. ஆனால், இந்த புதிய மாடலில் A-RT (anti-reverse torque) எனும் ஸ்லிப்பர் க்ளட்ச், புது ஸ்டிக்கர் டிசைன் மற்றும் Fly screen (வைஸர் போன்ற சிறிய பாகம்) கூடுதலாக சேர்க்கப்பட்டுள்ளது.
 
Apache RTR 200
 
A-RT ஸ்லிப்பர் க்ளட்சுக்கும் மற்ற பைக்குகளில் வரும் சாதாரண ஸ்லிப்பர் க்ளட்சுக்கும் வித்தியாசம் எதுவும் இல்லை. கியர் மாற்றும்போது கடத்தப்படும் back torque-க்கை இந்த  AR-T க்ளட்ச் குறைக்கிறது. இதன் மூலம் க்ளட்சுக்கு போகக்கூடிய விசை 22 சதவிகிதம் குறைவதாக கூறியுள்ளனர் டிவிஎஸ் நிறுவனத்தினர். புதிய பைக்கில் வேகமாக கியரை மாற்றமுடிவது மட்டுமல்லாமல் வளைவுகளில் கியரை குறைக்கும் போதும் ஏற்றும்போதும் பைக் ஸ்டேபிலாக இருக்கும். இதன் மூலம் பைக்கை டிராக்கில் ஓட்டும்போது அதன் பெர்ஃபார்மன்ஸின் பெரும் மாறுதல்களை பார்க்கலாம் ஆனால், சிட்டியில் ஓட்டும்போது கியர் பாக்ஸ் ஸ்மூத்தாக உள்ளதை தவிர வேறு வித்தியாசங்கள் எதுவும் தெரியாது.

RTR 200 Race edition 2.0
 
புதிய RTR 200V ரேஸ் எடிஷன் 2.0 மூன்று வேரியன்டுகளில் கிடைக்கின்றது. கார்புரேட்டர், FI மற்றும் கார்புரேட்டர் + ஏபிஎஸ் மாடல்கள். FI மற்றும் ஏபிஎஸ் ஒன்றாக உள்ள மாடல் இன்னும் விற்பனைக்கு வரவில்லை. பழைய மாடல்களை ஒப்பிடும்போது ரேஸ் எடிஷன் மாடல் அப்பாச்சியின் விலை 1,200 ரூபாய் மட்டுமே அதிகரித்துள்ளது.  தற்போது RTR 200V Race edition 2.0 பைக் ரூ.97.320 (எக்ஸ் ஷோரூம் சென்னை) விலைக்கு கிடைக்கிறது. இன்று முதல் இதற்கான புக்கிங்குகள் துவங்கப்பட்டுவிட்டது.

- ரஞ்சித் ரூஸோ.

TAGS :   TVS apache RTR 200 RE 2.0