அதிக சர்வீஸ் இடைவெளி, குறைந்த பாராமரிப்பு: Blazo டிரக்குக்கு மஹிந்திராவின் புதிய சேவைகள்...
Posted Date : 16:58 (10/03/2018)
Last Updated : 17:20 (10/03/2018)

மஹிந்திரா & மஹிந்திரா நிறுவனத்தின் டிரக் மற்றும் பஸ் பிரிவு தனது வாடிக்கையாளர்களுக்கு இதுவரை செக்மன்டிலேயே இல்லாத அளவு புதிய சேவைகளை அறிவித்துள்ளது. Blazo டிரக்குக்கு மட்டும் அளிக்கப்படும் இந்த சேவைகள் வாடிக்கையாளர்களின் மெயின்டெனன்ஸ் செலவை குறைக்கும் விதமாக இருக்கிறது. Blazo டிரக் வாங்குபவர்களுக்கு 6 ஆண்டுகள் / 6 லட்சம் கி.மீ வரை வாரண்டி, போட்டியாளர்களை விட அதிக ஆயில் சர்வீஸ் நேரம், குறைந்த ஆயில் விலை என்று டிரக்கில் சில வசதிகள் என்றால், வாகனம் நின்றுவிட்டால் 48 மணி நேரத்தில் சர்வீஸ் செய்துதரப்படும் என்றும், டெல்லி-மும்பை பகுதியில் 2 மணி நேரத்தில் மெக்கானிக் வந்து சரி பார்ப்பார்கள் என்றும், Blazo டிரக்குகளை மஹிந்திராவின் சர்வீஸ் சென்டருக்கு கொண்டுவந்தால் 36 மணிநேரத்தில் சர்வீஸ் செய்துதரப்படும் என்றும் தாமதமாகும் ஒவ்வொரு நாளும் வாடிக்கையாளருக்கு ரூ.3000 இழப்பீடு தரப்படும் என்றும் புதிய சேவைகள் அடுக்கப்பட்டுள்ளன. பொலேரோ பிக்அப் டிரக்குகளுக்கு இதுபோன்ற சில சலுகைகளை ஜனவரி மாதமே மஹிந்திரா அறிவித்திருந்தது.

மஹிந்திரா Blazo


" Blazo டிரக்குகளில் 90,000 கி.மீ ஒருமுறை இன்ஜின் ஆயிலை மாற்றினால் போதுமானது. ரியர் ஆக்ஸில் ஆயிலும், கியர் பாக்ஸ் ஆயில் மாற்றத்துக்கான இடைவெளியும் கூட அதிகரிக்கப்பட்டுள்ளன. மேலும் மஹிந்திரா இன்ஜின் ஆயிலின் விலை மற்ற நிறுவனங்களின் விலையை விட குறைவாகவும் உள்ளது. இதன்மூலம் டிரக் உரிமையாளர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் 18 சதவிகிதம் பராமரிப்பு செலவுகள் குறையும் " என்று மஹிந்திரா டிரக் மற்றும் பஸ் பிரிவின் நிர்வாக இயக்குனர் வினோத் சாஹோ கூறினார். 
 

மஹிந்திரா டிரக் மற்றும் பஸ் பிரிவு சர்வீஸ் சென்டர்களை விரிவு படுத்துவதில் தீவிரமாக உள்ளது. தற்போது இந்தியாவில் 92 டீலர்களும், 129 சர்வீஸ் சென்டர்களும், 2900 road side assistance நிலையங்களும் உள்ளன. உதிரி பாகங்கள் வாங்குவதற்காக 2069 சில்லரை விற்பனையகங்களும், டிரக் டிரைவர்களுக்கு வசதியாக குறிப்பிட்ட இடங்களில் 24 பெரும் உதிரிபாக விற்பனையகங்களையும் வைத்துள்ளனர். இந்தியாவில் எங்கிருந்தாலும், வாகனத்தின் பெரிய பாகங்களாக இருந்தாலும் கூட மெக்கானிக்குகளுக்கு கொண்டுவந்து தரப்படும் என்றும் இதற்கான செலவுகளையும் நிறுவனமே பார்த்துக்கொள்ளும் என்றும் மஹிந்திரா & மஹிந்திரா உறுதியளித்துள்ளது.
 
- ரஞ்சித் ரூஸோ
TAGS :   Mahindra blazo