ஐ.எஸ்.ஐ இல்லாத ஹெல்மெட்டுகளை விற்க தடை...
Posted Date : 19:48 (12/03/2018)
Last Updated : 19:52 (12/03/2018)

 ISI தரச்சான்று இல்லாத ஹெல்மெட்டுகள் பயன்படுத்த தடை இருந்தாலும் சிறிய கடைமுதல் பெரிய கடைவரை இவ்வாறான ஹெல்மெட்டுகள் விற்பனையாகிக் கொண்டுதான் இருக்கிறது. தற்போது மத்திய அரசு சாலை விதிகளில் பல குறிப்பிடும்படியான முன்னேற்றங்களை மேற்கொண்டுவருகிறது அந்த வகையில் ISI தரச்சான்று இல்லாத ஹெல்மட்டுகளை விற்பனை செய்யவதற்கு தடையை கொண்டுவந்து தண்டனையையும் நடைமுறைப்படுத்தவுள்ளது. இந்த தடை ஆண்டின் இறுதிக்குள் வரும் என்று மத்திய அரசின் தரக்கட்டுப்பாட்டு நிறுவனமான BIS-ன் மூத்த நிர்வாகி ஒருவர் கூறியுள்ளார்.

helmet 
 
வரவிருக்கும் இந்த புதிய விதியை பற்றி ISI ஹெல்மெட் தயாரிப்பாளர் சங்கத்தலைவர் ராஜிவ் கபுர் கூறுகையில் " தற்போது இந்தியாவில் பயன்படுத்தப்படும் 75 முதல் 80 சதவிகித ஹெல்மெட்டுகள் சரியான தரச் சான்றிதழ் இல்லாதவையே. ஹெல்மெட் உயிரை காக்கும் என்பதைவிட விலை குறைவாக உள்ளதா என்பதே ஹெல்மெட் வாங்குபவர்களுக்கு முதன்மையாக உள்ளது. இதுதான் தரமற்ற ஹெல்மெட்டுகளை தயாரித்து விற்பனை செய்பவர்களை ஊக்குவிக்கிறது. 
 
ISI தரச்சான்றுள்ள ஒரு ஹெல்மெட்டின் தயாரிப்பு செலவு மட்டுமே ரூ.300-400 வரை இருக்கும். 300 ரூபாய்க்கு குறைவாக யாராலும் ISI தரத்தில் ஹெல்மெட்டுகளை உருவாக்கமுடியாது.  இந்தியாவில் ஆண்டொன்றுக்கு 9 கோடி ஹெல்மெட்டுகளின் தேவையுள்ளது.  அரசாங்கத்தின் இந்த முயற்சியை வரவேற்கிறோம் இது தரமான ஹெல்மெட் தயாரிப்பவர்களை ஊக்குவிக்கும்." என்று கூறியுள்ளார். 
 
 
 
தற்போது இந்தியாவில் ISI தவிர ECE, DOT, SNELL மற்றும் SHARP போன்ற வெளிநாடுகளின் தரக்கட்டு சான்றிதழ் கொண்ட ஹெல்மெட்டுகளும் பயன்படுத்தப்படுகின்றன. இந்த ஹெல்மெட்டுகள் ISI ஹெல்மெட்டுகளை விட தரம் மற்றும் பாதுகாப்பில் உயர்ந்தவை. ஆனால், இதன் விலை பல மடங்கு அதிகம். இன்னும் 1000 ரூபாய்க்குள் ஹெல்மட் வாங்க நினைப்பவர்கள் மத்தியில் சிலர் இதுபோன்ற ஹெல்மட்டுகளை பயன்படுத்திகிறார்கள். ISI சான்றிதழ் இல்லாத ஹெல்மெட்டுகளை விற்பனை செய்வதை தடை செய்யும் முயற்சிக்கு அனைத்து பைக் ஆர்வலர்களும் வரவேற்பளித்துள்ளனர். சீக்கிரமே இந்த சட்டம் நடைமுறைக்கு வரும். 
 
- ரஞ்சித் ரூஸோ
TAGS :   helmet