ஸ்ப்ளெண்டரை வீழ்த்தியது ஆக்டிவா # SalesReport
Posted Date : 13:30 (23/03/2018)
Last Updated : 13:30 (23/03/2018)
 
தொடர்ந்து 13-வது மாதமாக முன்னிலை வகிக்கும் டூ வீலராக இருக்கிறது ஹோண்டா ஆக்டிவா. விற்பனையில் ரெக்கார்ட் வைத்திருந்து ஹீரோ ஸ்ப்ளெண்டரை ஜனவரி 2017-ல் தோற்கடித்த ஆக்டிவா. தற்போதுவரை இந்த இடத்தை விட்டுக்கொடுக்காமல் உள்ளது. கடந்த மாதம் மட்டுமே 247,377 ஆக்டிவா ஸ்கூட்டர் விற்பனையாகியுள்ளது. 
 
238,722 பைக்குகள் விற்பனை செய்து 2-ம் இடத்தில் உள்ளது. மூன்றாவதாக ஹீரோவின்  HF டீலக்ஸ் 165,205 பைக்குகள் விற்பனையாகியுள்ளன. 82,189 பைக்குகள் விற்பனை செய்து 125 சிசி செக்மன்டில் முதலிடத்திலும், டூ வீலர் செக்மன்டில் 4-வது இடத்திலும் உள்ளது ஹோண்டாவின் சிபி ஷைன். ஷைனின் புது வெர்ஷனை இந்த மாதம் வெளியிட்டுள்ளது ஹோண்டா. விற்பனையில் 5-ம் இடத்தில் இருப்பது டிவிஎஸ்  XL super. பிப்ரவரி மாதம் 71,931 பைக்குகள் விற்பனைச் செய்தாலும், கடந்த ஆண்டை விட இது 6.65 சதவிகிதம் குறைவு. மொப்பட்டுக்கு சந்தை மதிப்பு சரிந்துவந்தாலும், டிவிஎஸ்  XL-க்கு மட்டும் இன்னும் டிமான்ட் இருந்துகொண்டே இருக்கிறது. ஆனால், இது அதிக காலம் நீடிக்காது.
 
 
6-வது இடத்தில் இருப்பது ஹீரோவின் க்ளாமர் மாடல். கடந்த மாதம் 66,064 க்ளாமர் பைக்குகளை விற்பனை செய்துள்ளதுள்ளது ஹீரோ. இது கடந்த பிப்ரவரி மாத விற்பனையை விட 68 சதவிகிதம் அதிகம். இந்த பைக்குகளின் மத்தியில் இன்னொரு ஸ்கூட்டரும் உள்ளது. 63,534 யூனிட்டுகள் விற்பனைசெய்து டிவிஎஸ் ஜூபிட்டர் 7-வது இடத்தில் உள்ளது. ஹீரோ பேஷன் 8-வது இடத்தில் உள்ளது. கடந்த மாதம் 61,895 பேஷன் பைக்குகள் விற்பனையாகியுள்ளது. கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு விற்பனை 12 சதவிகிதம் குறைந்துள்ளது. அதிக விற்பனை எனும் பட்டியலில் ஒத்தைப் பனைமரமாக பஜாஜை காப்பாற்றியுள்ளது பல்ஸர். 60,772 பைக்குகள் விற்பனையாகி பல்ஸர் 9-வது இடத்தில் உள்ளது. கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு 13 சதவிகிதம் அதிக பல்ஸர்கள் விற்பனையாகியுள்ளன. கடைசியாக பத்தாவது இடத்தில் இருப்பது ராயல் என்ஃபீல்டின் க்ளாசிக் 350. ப்ரீமியம் செக்மன்டில் இருக்கும் ஒரே 350சிசி பைக் இதுதான். ராயல் என்ஃபீல்டுக்கு கடந்த மாதம் 48,557 க்ளாசிக் பைக்குகள் விற்பனையாகியுள்ளது. கடந்த ஆண்டை ஒப்பிடும்போது இந்நிறுவனத்துக்கு 19 சதவிகிதம் அதிக விற்பனை கிடைத்துள்ளது.
 
- ரஞ்சித் ரூஸோ.
 
TAGS :   Top sales Feb 2018