ஹூண்டாய் மோட்டார் இந்தியா பவுண்டேஷனின் விபத்தில்லா அண்ணாநகர்
Posted Date : 23:59 (24/03/2018)
Last Updated : 00:14 (25/03/2018)

 

ஹூண்டாய் அமைப்பின் சமூகத் தொண்டுநிறுவனமான ஹூண்டாய் மோட்டார் இந்தியா பவுண்டேஷன், சென்னை போக்குவரத்து காவல் துறையினருடன் இணைந்து, சென்னையின் முதல் சாலை பாதுகாப்பு அனுசரிப்புப் பகுதியை (Traffic Regulation Observed Zone) சென்னை அண்ணாநகரில் இன்று தொடங்கியது. விபத்தில்லா அண்ணாநகரை உருவாக்குவேம் என்ற உருதிமொழியுடன் தெடங்கிய இந்த நிகழ்ச்சியை yமேற்கு சென்னை டிராஃபிக் துணை ஆணையர் ஈஸ்வரன் தொண்டங்கி வைத்தார்.

சாலை பாதுகாப்பு


அண்ணா நகரின் சாலைகளை பாதுகாப்பானதாகமாற்றுவதே இதன் நோக்கம். போக்குவரத்து காவல் துறையினர், தன்னார்வலர் குழுக்கள் மற்றும் அண்ணாநகர்-வாசிகள் சேர்ந்து, அண்ணாநகரை ஒரு பாதுகாப்பான பகுதியாக மாற்ற முடிவெடுத்துள்ளனர் இதை ஹூண்டாய் நிறுவனம் ஒருங்கிணைக்கிறது. மூன்று கட்டங்களாக நடத்தப்படும் இந்த நிகழ்ச்சியின் மூலம், வாகன ஓட்டுனர்கள், பாதசாரிகள், வாகனங்களில் பயணிப்போர், மற்றும் அந்தந்தபகுதிகளில் வசிப்பவர்கள் ஆகியவர்கள் சாலை விதிகளை மதித்து கடைபிடிக்க வலியுறுத்தப் படுகிறார்கள்.

இந்த முயற்சியின் முதல் கட்டமாக இன்று, ஹூண்டாய் நிறுவன ஊழியர்கள் உட்பட நூற்றுக்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள், குடியிருப்புப் பகுதிகளில் வீடு வீடாகச் சென்று, சாலைகளை பொறுப்பாக உபயோகிப்பதன் அவசியத்தைப் பற்றி ஆலோசனைகள் வழங்கி, சபதமும்ஏற்கத் செய்தார்கள். பயணிகளை ஏற்றிச் செல்லும்போது அதிக கவனமாக வண்டி ஓட்டிச்செல்ல ஆட்டோ மற்றும் பேருந்து ஓட்டுனர்களிடமும்வலியுறுத்தினார்கள். சாலை பாதுகாப்பை நினைவுபடுத்தும் வாசகங்கள் கொண்ட ஸ்டிக்கர்களையும் ஆட்டோ, பஸ் போன்ற பொது வாகனங்களில்  ஓட்டினார்கள்.


சாலை பாதுகாப்புநிகழ்ச்சியின் போது பேசிய துணை ஆணையர் ஈஸ்வரன், "நமது நகரத்தை வாகனங்கள் உபயோகிப்பவர்களுக்கும், பாதசாரிகளுக்கும் பொதுமக்களுக்கும் பாதுகாப்பானதாக ஆக்கவேண்டும் என்பதற்குதான் இந்த முயற்சி. சென்னையில் நடக்கும் விபத்துகளில் டூ வீலர் ஓட்டுனர்கள்தான் அதிகம் பாதிக்கப்படுபவர்கள் " என்று கூறினார்.

இந்த நிகழ்ச்சியின்  இரண்டாம் கட்டம் அடுத்த சில வாரங்களில் துவங்க உள்ளதாக கூறியுள்ளனர். அதில், விபத்துக்களில் உயிர் தப்பியவர்கள், விபத்துகள் மூலம்தங்களது வாழ்க்கை எப்படி தலைகீழாக மாறியது என்பதைப்பற்றி பேருந்து மற்றும் ஆட்டோ ஓட்டுநர்களுடன் கலந்துரையாட உள்ளனர். வாகனங்களின் பதிவு எண்ணைகண்டறியும் Automatic Number-Plate Recognition (ANPR) கருவிகள் மற்றும் சிவப்பு விளக்கை மீறி சாலையைக் கடக்கும் வண்டிகளை கண்டுபிடிக்ககூடிய Red Light Violation Detectors (RLVD) கேமரா ஆகியவற்றை அதிக போக்குவரத்து நெரிசல் உள்ள சந்திப்புகளில் நிறுவ உள்ளார்கள். கடைசியாக மூன்றாவது கட்டத்தில், இந்த சாலைபாதுகாப்பு அனுசரிப்புப் பகுதியின் பொறுப்பு காவல் துறையினரிடம் ஒப்படைக்கப்படவுள்ளது. இந்த ANPR மற்றும் RLVD தொழில்நுட்பங்கள் ஸ்மார்ட் சிட்டி ப்ரொஜெக்ட்டின் ஒரு பகுதியாக ஏற்கனவே காவல்துறையால் பொறுத்தப்படவிருந்தவை.

சாலை பாதுகாப்பு" தமிழகத்தில் சாலை விபத்துகள் அதிகரித்து வருகின்றன. அதிகாரிகளுடன்கைகோர்த்து, சென்னையை பாதுகாப்பான இடமாக மாற்றுவது என்று உறுதி கொண்டுள்ளோம். எங்களுடைய இந்த  முயற்சியை இன்று அண்ணாநகரில் தொடங்கியுள்ளோம். இதேபோன்ற முயற்சியை நமது நகரத்தின் மற்ற பகுதிகளுக்கும் கொண்டு செல்ல திட்டமிட்டுள்ளோம் " என்று ஹூண்டாய் மோட்டார் இந்தியா பவுண்டேஷன்-இன் ட்ரஸ்ட்டி ஸ்டீபன் சுதாகர் நிகழ்ச்சியின் போது கூறினார்.

விபத்தில்லா அண்ணாநகருக்கு வாழ்த்துகள்...

- ரஞ்சித் ரூஸோ

TAGS :   hyundai, road safety