டொமினாரை கலாய்க்கும் ராயல் என்ஃபீல்டு நெட்டிசன்கள்...#Haathi mat palo
Posted Date : 18:52 (26/03/2018)
Last Updated : 18:53 (26/03/2018)
 
பஜாஜ் தனது டொமினார் பைக்குகளை விளம்பரம் செய்யும் சாக்கில் ராயல் என்ஃபீல்டு பைக்குகளை கலாய்த்து வருகிறது. Haathi mat palo என்று இதுவரை பல கலாய் வாங்கிய ராயல் என்ஃபீல்டிடம் பஜாஜ் டொமினார் தோற்றுப்போகும் வீடியோ சமூக வலைத்தளங்களில்  வைரலாகி கொண்டிருக்கிறது. 
 
' கொஞ்சம் ஓவராத்தான் போரோமோ...' என்று பஜாஜ் ஃபேன்ஸ் அனைவரையும் யோசிக்கவைத்துவிட்டது இந்த வீடியோ. இந்தியாவின் ஏதோ ஒரு மூலையில் உள்ள ரைடர் க்ளப் ஒன்று பைக்கில் மலையேற வந்துள்ளனர். மண் பாதையை கடக்கும்போது, மேடான இடத்தை ராயல் என்ஃபீல்டின் ஹிமாலயன் அசால்ட்டாக கடந்துபோய்விட்டது. ஆனால், பின்தொடர்ந்து வந்த டொமினார் மேட்டின் மீது ஏறாமல் அப்படியே நின்றுவிடுகிறது. எவ்வளவு முயற்சித்தும் டாமினாரால் ஏற முடியவில்லை. இரண்டு நண்பர்கள்  வந்து உதவி செய்வதுபோல இந்த வீடியோ முடிவடைகிறது. கடைசி வரை டொமினார் அந்த மேட்டின் மீது ஏறியதா என்பது தெரியவில்லை. 
 
 

 
ராயல் என்ஃபீல்டு ஹிமாலயன், ஆஃப்-ரோடு மற்றும் அட்வென்சருக்காகவே பிரத்தியேகமாக  உருவாக்கப்பட்ட பைக். 411 சிசி இன்ஜின், 24.5 bhp பவர், 3.3 kgm டார்க், சாஃப்ட்டான மோனோஷாக் சஸ்பென்ஷன், 21 இனச் வீல் என்று ஹிமாலயனில் உள்ள அனைத்துமே ஆஃப்ரோடுக்காக வடிவமைக்கப்பட்டவை. டொமினார் ஒரு பவர் க்ரூஸர். ஹைவேயில் அதிக தூரம் பயணிக்க உருவாக்கப்பட்ட பைக். 35 bhp பவர் மற்றும் 3.5 kgm டார்க் தருவதற்கு 373 சிசி இன்ஜின் இருந்தாலும், டாமினார் ஆஃப் ரோடு பைக் இல்லை. இதன் மோனோஷாக் சஸ்பென்ஷன் ஹிமாலயனைவிட ஸ்டிஃப். 17 இன்ச் வீல்கள் மட்டுமே. க்ரிப் அதிகமான டயர்கள் என்றாலும், ஆஃப் ரோடு டயர் இல்லை. இரண்டு பைக்குமே ஒரே எடை கொண்டவை. டொமினாரை விட ஹிமாலயன் ரூ.10,000 விலை அதிகம். கடைசியாக வந்த  Haathi mat palo 5 விளம்பரத்தில் ராயல் என்ஃபீல்டு சிக்கிக்கொள்வது போலவும் டொமினார் காட்டுக்குள் புகுந்து போவது போலவும் காட்சி வரும்.. இந்த விளம்பரம் டொமினாருக்கே பேக்ஃபயர் ஆகிவிட்டது.
 
 
- ரஞ்சித் ரூஸோ.
 
 
TAGS :   royal enfield vs dominar