பல்ஸர் 150 வாங்கபோரீங்களா? கொஞ்சம் வெயிட் பன்னுங்க பாஸ்...
Posted Date : 11:47 (27/03/2018)
Last Updated : 11:47 (27/03/2018)
 
பஜாஜ் பல்ஸர் 150-ன் அடுத்த மாடல் வரப்போகிறது. இதற்கான ஸ்பை படங்கள் சமூகவலைத்தளங்களில் பரவிக்கொண்டிருக்கின்றன. இந்த புதிய பல்ஸர் பைக்குகளுக்கான முன்பதிவுகள் தற்போது தொடங்கிவிட்டன. 
 
 
 
 
ஸ்பை படங்களை பார்க்கும்போது பல்ஸர் 150  UG5 இனி பல்ஸர் 180 பைக்கின் வடிவத்தில் வரப்போவது தெரிகிறது. தடிமனான 37 மிமீ முன் பக்க ஃபோர்க்குகள், ஸ்ப்லிட் சீட், ஸ்ப்லிட் கிராப் ரயில், என்று பல்ஸர் 180-யில் இருக்கும் அதே அம்சங்கள். கூடுதலாக க்ரோம் ஃபூட் பெக்ஸ்க்கு பதிலாக அலுமினியம் ஃபூட் பெக்ஸ் வருகிறது. சில்வர் வீலுக்கு பதிலாக புதிய பைக்கில் மேட் ப்ளாக் ஃபினிஷிங்குடன் 17 இன்ச் அலாய் வீல் வருகிறது. இது எல்லாமே சும்மா.. மெயின் அப்டேட்டே பைக்கின் பிரேக்தான். 150  UG5 பைக்கில் இப்போது பெரிய 260 மி.மீ முன்பக்க டிஸ்க் மற்றும் 230 மி.மீ பின்பக்க டிஸ்க் பிரேக் வருகிறது. 
 
 
பைக்கில் இருப்பது கடந்த ஆண்டு வெளியான 150சிசி பிஎஸ்-4 இன்ஜின்தான். பவர் மற்றும் டார்க்கில் பெரிய மாற்றங்கள் இருக்க வாய்ப்பில்லை. ஆனால், அவென்ஜர் 180 மற்றும் டிஸ்கவர் 110-ல் பைக்கின் வைப்ரேஷனை குறைத்ததுபோல இதிலும் குறைக்க வாய்ப்புள்ளது.
 
 
 
 
விலையைப் பொருத்தவரை பழைய பைக்கைவிட ரூ.2,300 அதிகமாக உள்ளது. தோராயமாக புதிய பல்ஸரின் விலை ரூ,89,000 முதல் 90,000 வரை இருக்கும். போட்டியாளர்களுடன் ஒப்பிடுகையில் பல்ஸர் 150  UG5 பைக்தான் ரியர் டிஸ்க் பிரேக்குடன் வரும் விலைகுறைவான 150சிசி பைக். இந்த பைக்கை பஜாஜ், பல்ஸர் 150R என்று விற்பனை செய்யப்போவதாக தகவல்.
 
 
 
 
UG5 அப்டேட் வெறும் ட்ரெய்லர்தான். மெயின் பிக்ச்சர் அடுத்த ஆண்டு வரவுள்ள பல்ஸர் 150  UG6 பைக்தான். இன்ஜின், சேஸி, பிரேக், LED லைட் என்று பல அப்டேட்கள் உள்ளன. காத்திருங்கள் பல்ஸர் பாய்ஸ்.
 
 
- ரஞ்சித் ரூஸோ
 
 
படங்கள் : Autocar.
 
TAGS :   Pulsar 150 new