டாடா நெக்ஸானின் புது வேரியன்ட வெளியாகியுள்ளது...
Posted Date : 13:15 (27/03/2018)
Last Updated : 13:15 (27/03/2018)
 
டாடா மோட்டார்ஸ் தனது நெக்ஸான் காரின் புது வேரியன்ட்டை வெளியிட்டுள்ளது. XZ என்று சொல்லப்படும் இந்த வேரியன்ட் டாப் வேரியன்ட்டான XZ+ விட தோராயமாக ரூ.55,000 முதல் ரூ.63,000 ரூபாய் வரை விலை குறைவானது. காரின் இன்ஜின் மற்றும் ஓட்டுதல் தன்மையில் எந்த மாற்றமும் இல்லை. மற்ற வேரியன்ட்டில் வரும் 110bhp பவர் தரும் 1.5 லிட்டர் டீசல் மற்றும் 1.2 லிட்டர் பெட்ரோல் இன்ஜின்தான் இதிலும் . புதிய டிரைவ் மோடுகள் கூட இல்லை. எல்லாமே வெளிப்புற மாற்றங்கள்தான். 
 

 
 
தற்போது டாப் வேரியன்ட்டாக இருக்கும் XZ+ வேரியன்டுக்கு கீழே பெசிஷன் செய்யப்படும் இந்த XZ வேரியன்ட்டில் டூயல் டோன் ரூஃப், DRL லைட்டுகள், அலாய் வீல், முன் மற்றும் பின் சீட்டில் இருக்கும் centre armrests, ஸ்ப்லிட் ஃபோல்டிங் சீட்டுகள், முன் மற்றும் பின் பக்க பனி விளக்குகள், smart-key மற்றும் push-start button போன்ற அம்சங்கள் இல்லை.  ஆனால், லோ வேரியன்டில் இல்லாத ப்ரொஜக்டர் ஹெட்லைட்டுகள், ஸ்மார்ட் ஃபோன் இன்டக்ரேஷன் வசதி கொண்ட 6.5 இன்ச் ஹார்மன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், வாய்ஸ் கமான்ட், வாய்ஸ் அலர்ட் மற்றும் உயரம் அட்ஜஸ்ட் செய்யக்கூடிய டிரைவர் சீட் போன்றவை வருகிறது.
 
 
 
 
டாப் வேரியன்ட்டான நெக்ஸான் XZ+ சென்னை ஆன்ரோடு விலை ரூ.11,52,036 (டீசல்) மற்றும் ரூ.10,50,522 (பெட்ரோல்). விரைவில் நெக்ஸானின் ஆட்டோமெடிக் கியர் பாக்ஸ் மாடலும் வரவுள்ளது.
 
 
- ரஞ்சித் ரூஸோ.
 
TAGS :   TATA NEXON, TATA CARS