புது அவதாரம் எடுக்கவுள்ளான் ராயல் என்ஃபீல்டின் தீவிர எதிரி...
Posted Date : 17:07 (27/03/2018)
Last Updated : 13:02 (29/03/2018)
 
'முண்டாசுபட்டி' படத்தில் ஒரு கேரக்டராகவே வருமே அந்த பைக்தான் ராயல் என்ஃபீல்டின் தீவிர எதிரி. அந்தக்காலங்களில் ராயல் என்ஃபீல்டின் மார்க்கெட் சரிய காரணமே இந்த ஜாவா-எஸ்டி பைக்குகள்தான். மஹிந்திரா எப்போது இந்த பைக் நிறுவனங்களை வாங்கியதோ அப்போ இருந்தே இந்தியாவுக்குச் சீக்கிரம் வரும் என்று எதிர்பார்த்த ஜாவா பைக் மேட்டரில் இப்போ ஒரு அப்டேட். சமீபத்தில் கிடைத்த தகவலின் படி மீண்டும் களமிறங்கும் ஜாவா பைக், மஹிந்திராவின் மோஜோ இன்ஜினோடு வரவுள்ளது. 
 
 
(படம் - Oberdan Bezzi Design) வரவிருக்கும் ஜாவா பைக்கின் படம் அல்ல.
 
 
மஹிந்திராவின் 255 cc இன்ஜின் 26 bhp பவரும் 3  kgm டார்க்கும் தரக்கூடியது. இது ராயல் என்ஃபீல்டு பைக்குகளை விட அதிகம். ஜாவாவின் வரலாற்றில் அதிக விற்பனையை அடைந்து இதன் 250சிசி மற்றும் 350சிசி பைக்குகள்தான். இந்த ராசியை அப்படியே தக்கவைத்துக்கொள்ள மோஜோவின் இன்ஜினை 50 சிசி குறைவாகவோ அல்லது அதிகமாகவே ரீபோர் செய்து பயன்படுத்தவுள்ளதாம் மஹிந்திரா. புது இன்ஜின் தயாரிக்க அதிக நேரம் தேவைப்படும். அதிக செலவுகள் ஆகும். அதனால், இருக்கும் இன்ஜினை மாற்றியமைத்துப் பயன்படுத்துவதால் சீக்கிரமே, முடிந்த அளவு விலை குறைவாக பைக்கை விற்பனைக்குக் கொண்டுவரலாம் என்று நினைத்துள்ளதாம் மஹிந்திரா.
 
 
 
 
தற்போது இருக்கும் அதே பவர் மற்றும் டார்க் கண்டிப்பாக இருக்காது. ஒரே இன்ஜினில் பல பைக்குகளை தயாரிக்கவுள்ளது மஹிந்திரா. ஜாவா, எஸ்டி என்று இரண்டு பிராண்டுகளிலும் பைக்குகள் வரப்போவதால் பைக்குகக்கு ஏற்றமாதிரி இன்ஜின் ரீ டியூன் செய்யப்படும். வின்டேஜ் மற்றும் க்ளாசிக் லவ்வர்களுக்கு இன்னொரு நல்ல செய்தியும் உள்ளது. இந்த பைக்குகளை 2018-ன் இறுதியில் முதல் முறை காட்சிப்படுத்தவுள்ளது. பெரும்பாலும், மிலான் மோட்டார் ஷோவில் இந்த பைக்குகளை எதிர்பார்க்கலாம். இந்தியாவிலேயே அதிகம் விற்பனையாகும் ப்ரீமியம் பைக்காக இருக்கும் ராயல் என்ஃபீல்டுக்கு போட்டியாக பெனல்லி வரப்போகிறது என்றாலும் பெனல்லியிடம் இல்லாத ஒரு விஷயம் ஜாவாவிடம் உள்ளது. பெயர், புகழ், ஃபேன்ஸ், க்ளப், வின்டேஜ் அடையாளம்.
 
 
- ரஞ்சித் ரூஸோ.
 
 
TAGS :   JAWA, YEZDI, VINTAGE