விபத்துக்களை குறைக்க வாப்கோவின் புதிய டிரெய்லர் தொழில்நுட்பம்
Posted Date : 14:39 (29/03/2018)
Last Updated : 13:25 (17/04/2018)

 

டிரக் மற்றும் ட்ரெய்லர் விபத்துக்களைத் தவிர்க்கும் வாப்கோவின் Intelligent Trailer Program தொழில்நுட்பத்தை நேற்று, முதல் முறையாக இந்தியாவில் காட்சிப்படுத்தியது. இத்தொழில்நுட்பத்துடன் இயங்கும் டிரக் மற்றும் டிரெய்லர்களின் பாதுகாப்பு மற்றும் தொழில்நுட்ப யுத்திகளை திருவள்ளூரில் உள்ள தனது டெஸ்ட் டிராக்கில் நேரடியாகப் பார்த்தோம். 

 

 
பெல்ஜியம் நிறுவனமான வாப்கோவுக்கு இந்திய சந்தை மிகவும் முக்கியமானது. தற்போது காண்பித்திருக்கும் இந்தத் தொழில்நுட்பத்தை சீக்கிரமே டிரக் மற்றும் டிரெய்லர்களில் கொண்டுவரப்போகிறார்கள். இதற்கான பேச்சுகள் டாடா டிரக் நிறுவனத்துடன் நடைபெற்று வருவதாகக் வாப்கோ இந்தியா நிறுவனத்தின் தலைவர் கண்ணப்பன் கூறினார் .
 
 
 
Intelligent Trailer Program (ITP) என்பது வாப்கோவின் trailer electronic braking system (T-EBS) எனும் உயர் தொழில்நுட்பத்துடன் 40-க்கும் அதிகமான தொழில்நுட்பங்கள் ஒருங்கிணைக்கப்பட்டது. மைலேஜ், டயர் தேய்மானம், பாதுகாப்பு, பராமரிப்பு போன்ற விஷயங்களில் டிரக்கை மேம்படுத்த இவை உதவும். நேற்றைய நிகழ்ச்சியில் டிரக் மற்றும் டிரெய்லரில் ABS பொருத்துவதன் மூலம் ஈரமான சாலையில் கூட டிரக் சறுக்காமலும், ஜாக் நைஃபிங் ஆகாமலும் எப்படி நிற்கிறது,   roll stability support இருப்பதால் சட்டென்று திரும்பும்போதும் டிரக் கவிழாமல் எப்படி இருக்கிறது, ரிவர்ஸ் எடுக்கும்போது எதையும் மோதிவிடாமல் ஆட்டோமெடிக்காக பிரேக் போட்டு நிற்கும் TailGuard தொழில்நுட்பம், டயர் பிரஷர் குறைந்தால் அலாரம் அடிக்கும் OptiTire, டிரெய்லரில் பொருட்களை லோட் செய்ய லோடிங் டாக்கின் உயரத்தை அட்ஜெஸ்ட் செய்து பிறகு ஆட்டோமெடிக்காக சரியான உயரத்துக்குக் கொண்டுவரும் OptiLevel வசதி மற்றும் மொபைல் செயலி மூலமே டிரக்கை பராமரிக்கும்   OptiLink. என முக்கியமான 6 அம்சங்களை செயல்முறையானவே காண்பித்தது. விபத்து சூழலை செயற்கையாக உருவாக்கி, டிரக் எப்படி அதில் இருந்து தப்பிக்கிறது என்பதை கண்ணெதிரே நிறுத்தியது. விரைவில் இந்த உயர் தொழில்நுட்பங்கள் குறைந்த விலையில் நம் டிரைவர்களுக்கு கிடைக்கும் என்று நம்புவோம்.
 

வாப்கோ தொழில்நுட்பம்

 
இந்தியாவில் வரும் ஏப்ரல் 1-ம் தேதி முதல் அனைத்து டிரெய்லர்களிலும் ABS கட்டாயமாக்கப்பட்டுவிட்டது. 1-ம் தேதிக்குப் பின் ஏபிஎஸ் இல்லாத டிரக்குகளை ஆர்.டி.ஓ அலுவலகத்தில் பதிவுசெய்யமுடியாது. மத்திய அரசின் இந்த முயற்சியை வாப்கோ நிறுவனம் வரவேற்றுள்ளது. ஏபிஎஸ் இருப்பதால் எந்த விதமான சாலையாக இருந்தாலும் அவசர நிலையில் பிரேக் அடிக்கும்போது, டிரெய்லரின் வீல் சறுக்காமல் நேராக இருக்கும். பிரேக் பயன்படுத்தும்போது சரியான திசையில் டிரக்கை செலுத்த முடியும். தற்போது ஐரோப்பாவில் பல இடங்களில் இதைவிட உயர் தொழில்நுட்பமான T-EBS வந்துவிட்டது. EBS தொழில்நுட்பத்தால் டிரக்கின் ஸ்டாப்பிங் டிஸ்டன்சை கணக்கிட்டு அதற்கு ஏற்றவாறு தானாகவே பிரேக்கை செயல்படுத்தமுடியும். கூடுதலாக சஸ்பென்ஷனையும் அதற்கேற்றவாறு அட்ஜஸ்ட் செய்துவிடுகிறது.   T-EBS அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டதுதான் Intelligent trailer program தொழில்நுட்பம்.
 
 
- ரஞ்சித் ரூஸோ.
 

 

TAGS :   Wabco, டிரக் & டிரெய்லர்