தொழில்நுட்ப கல்லூரிகளுக்கு இன்ஜின்-கியர்பாக்ஸ் தருகிறது BMW...
Posted Date : 20:05 (29/03/2018)
Last Updated : 20:06 (29/03/2018)

 

பிஎம்டயிள்யூ தனது சென்னை தொழிற்சாலையின் 11-வது ஆண்டு விழாவை இன்று கொண்டாடியது. இந்த நிகழ்ச்சியில், Skill Next என்ற புதிய CSR சேவையை அறிமுகப்படுத்தியது. இச்சேவையின் படி பிஎம்டயிள்யூ, 365 இன்ஜின் மற்றும் கியர்பாக்ஸை இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் உள்ள இன்ஜினியரிங் மற்றும் தொழில்நுட்ப கல்லூரிகளுக்கு முதல் வருபவர்களுக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் கொடுக்கவுள்ளது. இந்த இன்ஜினுக்கு கல்லூரிகள் எந்தக்கட்டணமும் தரதேவையில்லை.

 

சச்சின் பிஎம்டபிள்யூ
 
 
மாணவர்களின் பயிற்சிக்காக பிஎம்டயிள்யூ தனது 3  series, 5 series, X1, X3, மினி கூப்பர் கன்ட்ரிமேன் போன்ற வாகனங்களில் பயன்படுத்தப்பட்ட இன்-லைன் 4 சிலிண்டர்-2.0 லிட்டர் ட்வின் டர்போ டீசல் இன்ஜினையும், sequential shift முறையில் இயங்கும்  8 ஸ்பீடு ஆட்டோமெடிக் கியர்பாக்ஸையும் தரவுள்ளது. இந்த இன்ஜின் தொழில்நுட்பத்தில் பயிற்சி பெற்ற 40 இன்ஜினியர்கள், 20 நகரங்களிலும் உள்ள தங்கள் டீலர்கள் மூலம் விருப்பமானவர்களுக்கு இன்ஜின் தொழில்நுட்பத்தை பற்றிக் கற்றுக்கொடுப்பார்கள். இன்ஜினில் நாமே வேலைசெய்யலாம், எல்லாமே நடைமுறை பயிற்சிதான் என்கிறார்கள்.
 
பிஎம்டபிள்யூ இன்ஜின்
 
 
சென்னை வெள்ளத்தில் சேதமான கார்களில் இருந்து எடுக்கப்பட்ட இன்ஜின்கள்தான் இவை. கார்களில் பயன்படுத்தமுடியாது என்றாலும், ஓடும் நிலையில் இருப்பதால் கல்லூரிகளுக்கு தருகிறோம் என்று கூறியுள்ளனர் பிஎம்டபிள்யூ நிறுவனத்தினர்.  இந்தியாவில் லக்ஸரி கார் பிரிவில் பல தொழில்நுட்பங்கள் வந்துவிட்டது, ஆனால் அதற்கு  சர்வீஸ் செய்யத்தான் ஆட்கள் குறைவாக உள்ளனர். இந்த ' skill next' உதவியுடன் பல லக்ஸரி கார் டெக்னீஷியன்களை உருவாக்கமுடியும்' என்று பிஎம்டயிள்யூ இந்தியாவின் தலைவர் விக்ரம் பவா கூறினார்.  நிகழ்ச்சியில் கலந்துகொண்ட கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் " பிஎம்டயிள்யூவின் இந்த  Skill next முயற்சி மூலம் இந்தியாவில் ஆட்டோமோடிவ் இன்ஜினியரிங் சார்ந்த திறமைகளை வளர்க்கமுடியும். கிரிக்கெட்டைப் பற்றி படித்திருந்தால் மட்டுமே விளையாடியிருக்க முடியாது.  Skill next மூலம் மாணவர்கள் நேரடி செயல்முறை அனுபவம் மூலமாகத் தொழில்நுட்பத்தை கற்றுக்கொள்ள வேண்டும்" என்று கூறினார். 
 
 
- ரஞ்சித் ரூஸோ.
 
TAGS :   பிஎம்டபிள்யூ, சென்னை, Skillnext