2000 ரூபாய் விலைகூடியது டொமினார் 400
Posted Date : 14:39 (30/03/2018)
Last Updated : 14:43 (30/03/2018)
 
பஜாஜ் தனது டொமினார் 400 பைக்கின் விலையை ரூ.2000 வரை உயர்த்தியுள்ளது. புதிய வண்ணத்தில் டொமினாரின் 2018 மாடல் கடந்த ஜனவரி மாதம் விலையேற்றம் எதுவும் இல்லாமல் வெளியானது. 2017 டிசம்பர் மாதம் டொமினார் விற்பனைக்கு வந்ததுமுதல் இதுவரை 4 முறை இந்த பைக்கின் விலையை மாற்றியுள்ளது பஜாஜ். அதனால், இந்த ஆண்டும் விலை கூடும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது 2000 ரூபாய் விலைகூடியுள்ளது. இந்த ஆண்டு வெளியான 2018 டொமினாரில் பவர் மற்றும் டார்க்கில் எந்த மாற்றமும் இல்லை. ஆனால், இன்ஜின் முன்பை விட அதிர்வுகள் குறைந்து ஸ்மூத்தாக உள்ளது. இதற்கு  ECU அப்டேட்தான் காரணம்.டொமினாரில் 373 சிசி சிங்கிள் சிலிண்டர் இன்ஜின் வருகிறது. 35 bhp பவரும் 3.5 kgm டார்க்கும் இந்த இன்ஜினில் இருந்து கிடைக்கிறது. தற்போது டொமினார்  non-abs வேரியன்ட் சமீபத்தில்தான் நிறுத்தப்பட்டது. மீண்டும் ஒரே ஒரு நிறத்தில் மட்டுமே இந்த பைக் வெளிவரப்போகிறது என்ற தகவல்கள் வந்துள்ளன. தற்போதைய விலையேற்றத்துக்குப் பிறகு டொமினாரின் தோராயமான சென்னை ஆன்-ரோடு விலை ரூ.1,76,900.   

- ரஞ்சித் ரூஸோ.
 
TAGS :   பஜாஜ், டொமினார்,