``பெண்களுக்குக் கடினமான துறை என்பது கிடையாது” - சச்சினை அசரவைத்த அண்ணா பல்கலைக்கழக மாணவி
Posted Date : 22:49 (30/03/2018)
Last Updated : 22:50 (30/03/2018)

 

நேற்று பிஎம்டபில்யூவின் 11-வது ஆண்டு விழா நடைபெற்றது. இந்த விழாவில் ஸ்கில் நெக்ஸ்ட் எனும் திறன்மேம்பாட்டிற்கான தொழில்நுட்ப பயிற்சி அறிமுகம் செய்யப்பட்டது. இந்த விழாவில் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் கலந்துகொண்டு அவர்களுக்குப் பயிற்சி வகுப்பைத் தொடங்கி வைத்தார். அதை பற்றிய செய்திக்கு கிளிக் இங்கே செய்யவும்.

 



நிகழ்ச்சியின் இடையே சச்சின் டெண்டுல்கர் அசெம்பிள் செய்யும் இடத்திற்கு வந்தார். பலத்த கரகோஷங்களோடு அவரை அங்கிருந்தவர்கள் வரவேற்றனர். அப்போது, ஸ்கில் நெக்ஸ்ட் போன்ற முன்முயற்சிகள் நமது நாட்டின் ஆட்டோமோட்டிவ் வளர்ச்சியை மேம்படுத்தும் என நான் உறுதியாக நம்புகிறேன். நேரடி பயிற்சிதான் நமது திறனை அதிகரிக்கும். விளையாட்டு துறையில் எனது வெற்றிக்கு நேரடி பயிற்சிகளே உதவின. அதுபோல் மாணவர்களும் இந்தப் பயிற்சி மூலம் தங்கள் தொழில்நுட்பத் திறனை மேம்படுத்திக் கொள்ளவேண்டும்” என்றார். பிறகு, அண்ணா பொறியியல் கல்லூரி மாணவர்களோடு அவர் தொழில் நுட்பம் பற்றிய கேள்விகளுக்குப் பதிலளித்தார்.

 

(படம் : Balasubramanian.S)


அப்போது அருகிலிருந்த மாணவியிடம் நீங்கள் எவ்வளவோ பிரிவுகள் இருக்கக் கடினமான மெக்கானிக்கல் பிரிவைத் தேர்ந்தெடுத்தது ஏன் என சச்சின் டெண்டுல்கர் கேட்டார். ``சிறிய வயதிலிருந்தே எனக்கு மெக்கானிக்கல் பிரிவில் அதிக ஆர்வம் இருந்ததுதான் இதற்கு முக்கிய காரணம். பெண்களுக்குக் கடினமான துறை என்பது கிடையாது. ஆர்வமும் அதனை எப்படி அடையவேண்டும் என முயற்சி செய்வதிலும்தான் வெற்றி அமைந்துள்ளது” என்றார். ``உங்களைப் போல நிறையப் பெண்கள் இந்தத் துறைக்கு வர நீங்கள் முன்மாதிரியாக இருக்க வேண்டும்” என அந்த மாணவிக்கு சச்சின் வாழ்த்து தெரிவித்தார். பிறகு, அந்த மாணவர்களுக்கு பி.எம்.டபிள்யூ என்ஜினை அசம்பிள் செய்து அதை வாகனத்துடன் பொருத்திக் காட்டினார்.

TAGS :   BMW, Sachin, Chennai