ஹோண்டா சிட்டி டீசல் இன்ஜினில் ஆட்டோமேடிக் வராது... ஹோண்டா அதிர்ச்சி
Posted Date : 11:21 (31/03/2018)
Last Updated : 15:36 (02/04/2018)

ஹோண்டா சிட்டி காரின் டீசல் இன்ஜின் வேரியன்ட் உடன்  CVT ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் வரப்போவதில்லை என ஹோண்டா நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது.

ஹோண்டா சிட்டி

கடந்த பிப்ரவரி மாதம் நடைபெற்ற ஆட்டோ எக்ஸ்போவில் புதிய அமேஸ் காரை காட்சிப்படுத்தி அசத்தியது ஹோண்டா. அதுமட்டுமில்லாமல்,  CVT கியர்பாக்ஸுக்கு கூட்டணியாக டீசல் இன்ஜின் வேரியண்ட்டை வைத்து அனைவருக்கும் இன்ப அதிர்ச்சியைக் கொடுத்தது. இந்தக் கூட்டணி தற்போது இருக்கம் சிட்டியில் வரவாய்ப்புள்ளது என்று நினைத்தோம். ஆனால், சிட்டியின் டீசல் இன்ஜினுடன்  CVT தொழில்நுட்பத்தை பொருத்துவதற்கு நேரமும், முதலீடும் அத்திக்கமாகத்தேவை. சிட்டியின் விற்பனைக்கு இது நியாயம் செய்யாது. அதனால், சிட்டிக்கு ஆட்டோமேட்டிக் டீசல் வேரியன்ட் இப்போது கிடையாது என்று கூறியுள்ளார்கள்.
 
 

 
ஹோண்டாவின் இன்ஜினியர்கள் மற்ற கார்களில்  CVT கியர்பாக்ஸை பொருத்துவதற்கான முயற்சியில் உள்ளனராம். நிச்சயம் அடுத்த ஜெனரேஷன் சிட்டியில் ஆட்டோமேட்டிக் டீசல் வேரியன்ட் வரும் என்றும் கூறியுள்ளனர். அடுத்த சிட்டி வருவதற்கு இன்னும் பல ஆண்டு காத்திருக்கவேண்டும்.  BSVI கட்டாயமாக்கப்பட்டதால் தற்போது ஹோண்டாவின் 1.5 லிட்டர்  i-DTEC டீசல் இன்ஜினை பிஎஸ்-6 மாடலாக மாற்றும் முயற்சியில் உள்ளது ஹோண்டா. அதுவரை ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் பிரியர்களுக்கு 119 bhp பவர் தரும் 1.5 லிட்டர்  i-VTEC இன்ஜின்தான் ஒரே சாய்ஸ். போட்டியாளர்களான ஹூண்டாய் வெர்னாவிடம் 5 ஸ்பீடு  torque converter ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸும், ஃபோக்ஸ்வாகன் நிறுவனத்தின் வென்டோ மற்றும் ஸ்கோடா ரேபிட் கார்களில் டூயல் க்ளட்ச் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸும் இருப்பது குறிப்பிடத்தக்கது.   


- ரஞ்சித் ரூஸோ.
 
TAGS :   சிட்டி, ஹோண்டா