ஹூண்டாய் ஐ30 கார் இந்தியாவில் என்ன செய்கிறது?
Posted Date : 14:28 (31/03/2018)
Last Updated : 14:28 (31/03/2018)

 

ஹூண்டாய் இந்தியாவின் ஹேட்ச்பேக் கார் படையில் ஐ10 மற்றும் ஐ20 கார் வரைதான் இருக்கிறது. அது என்ன ஐ30? ஐ10 சிறிய ஹேட்ச்பேக் கார், ஐ20 அதைவிடப் பெரிய ஹேட்ச்பேக். அதே வரிசையில் ஹூண்டாய், ஐ30 என்ற ப்ரீமியம் ஹேட்ச்பேக் காரையும் தயாரிக்கிறது. ஆனால், இந்த கார்களை ஐரோப்பிய சந்தையில் மட்டுமே விற்பனை செய்கிறது இந்நிறுவனம்.
 
 
ஹூண்டாய்
 
 
எலான்ட்ரா காரை ஹேட்ச்பேக்காக மாற்றினால் எப்படி இருக்கும். அதிக இடவசதி, செம்ம பர்ஃபாமன்ஸ், தரமான கேபின், சொகுசு கார் போன்ற வசதிகள் அதுதான் ஐ30. இந்தக் காரை சென்னையில் டெஸ்ட் செய்வது போன்ற ஸ்பை ஃபோட்டோ சமீபத்தில் வெளியாகியுள்ளது. 
 
ஹூண்டாய், இந்தக் காரை இந்தியாவுக்குக் கொண்டுவருவதற்கு வாய்ப்பில்லை. ஐ30, நான்கு மீட்டருக்கு அதிகமான கார் என்பதால் ஜிஎஸ்டி வரி அதிகம். இந்தியாவுக்கு இதை கொண்டுவருகிறது என்றால் இதன் ஆரம்பவிலை தோராயமாக 8.5 லட்சம் வரை இருக்கும். அவ்வளவு விலை கொடுத்து ஹேட்ச்பேக் காரை வாங்குபவர்கள் குறைவு. ஸ்டேட்டஸ் சிம்பல் என்று நம்பப்படும் செடான் கார்களையே வாங்குவார்கள்.
 
ஹூண்டாய்
 
 
தற்போது டெஸ்ட் செய்யப்படும் ஐ30 கார் போல ஹூண்டாயின் ஜெனிஸிஸ் கார்கள் பலமுறை டெஸ்ட் செய்யப்பட்டுள்ளது. இந்தியாவுக்கு வரவில்லை என்றாலும், மற்ற நாடுகளில் விற்பனையாகும் மாடல்கள் எப்படி இருக்கிறது என்று இந்திய இன்ஜினியர்கள் பார்த்து தெரிந்துகொள்வது அவசியம் அதற்காகத்தான் இந்த கார்கள் இந்திய மண்ணில் டெஸ்ட் செய்யப்படுகிறது. மேலும், கார்களை இந்தியாவுக்குக் கொண்டுவருவதற்கு இங்கே அந்தக் காரை பரிசோதிப்பது அவசியம். தற்போது இந்தியாவுக்கு ஐ30 கிடையாது.
 
- ரஞ்சித் ரூஸோ.
 
TAGS :   ஹூண்டாய், ஐ30