விற்பனைக்கு வந்தது ஹோண்டாவின் புதிய ஹார்னெட்
Posted Date : 11:45 (02/04/2018)
Last Updated : 15:35 (02/04/2018)

 

ஹோண்டாவின் விற்பனை அடிப்படையில் வெற்றிகரமான பைக்காக இருக்கும் ஹார்னெட் கடந்த 2015 டிசம்பர் மாதம் வெளியானது. வெளியானது முதல் விற்பனையில் ஏறுமுகமாக இருக்கும் ஹார்னெட்டின் 2018-ம் ஆண்டு மாடல் தற்போது விற்பனைக்கு வந்துவிட்டது. 
 
புதிய ஹார்னெட் மெக்கானிக்கலாக எந்த மாற்றமும் அடையவில்லை. ஆனால், ஸ்டைல் மற்றும் டிசைன் மாற்றங்கள் உண்டு. டிசைன் மாற்றங்களாக LED ஹெட்லைட் வந்துள்ளது. டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கன்சோல் அப்படியேதான் இருக்கிறது ஆனால் அதன் டிசைன் மாறிவிட்டது. ஸ்பீடோமீட்டரில் ஆரஞ்சு லைட்டுக்கு பதிலாக ப்ளூ லைட் வந்துவிட்டது. 162.7cc இன்ஜினில் எந்த மாற்றமும் இல்லை. 14.9bhp பவரும் 14.5Nm டார்க்கும் கிடைக்கிறது. பல்ஸர் 160NS போல இன்ஜின் ஆயில் கூல்டு இல்லை. 
 
 
 
 
160cc பைக் செக்மன்டிலேயே முதல் முறையாக ஹார்னெட்டில்தான் ஏபிஎஸ் பிரேக் ஆப்ஷனாக வருகிறது. ஹார்னெட்டில் சிங்கிள் சேனல் ஏபிஎஸ்ஸை ஆப்ஷனாக தருகிறது ஹோண்டா. ஏபிஎஸ் மாடலிலும் DLX, STD என இரண்டு வேரியண்ட்டுகள் வருகிறது. ஏபிஎஸ் இருந்தாலும், STD மாடலில் பின்பக்கம் டிரம் பிரேக் மட்டுமே உள்ளது. டிஸ்க் பிரேக் இருப்பதால் DLX மாடல் ரூ.2,500 விலை அதிகம். தற்போது ஹார்னெட்டின் பேஸ் வேரியண்ட் 90,000 ரூபாய்க்கு கிடைக்கிறது. இதில் பின் பக்கம் வெறும் டிரம் பிரேக்தான் உள்ளது. அடுத்ததாக சிபிஎஸ் மாடல் 94,000 ரூபாய்க்கும், ஏபிஎஸ் STD மாடல் சிபிஎஸ் மாடலை விட ரூ.1000 அதிகமாகவும் உள்ளது. கடைசியாக டாப் வேரியன்ட்டான ஏபிஎஸ் DLX மாடலின் விலை 97,000 ரூபாய் (அனைத்து விலையும் தோராயமான சென்னை ஆன்ரோடு விலை).  புதிய ஹார்னெட் பைக்கில் புதிய ஸ்டிக்கர் டிசைன் வந்துள்ளது. தற்போது இருக்கும் Athletic Blue Metallic / Striking Green / Mars Orange / Sports Red நிறங்களுடன் புதிதாக Dazzle Yellow Metallic நிறம் வந்துள்ளது.
 
- ரஞ்சித் ரூஸோ.
 
TAGS :   ஹார்னட், ஹோண்டா மோட்டார்ஸ்