வெளியாகியுள்ளது மஹிந்திரா XUV500 ஃபேஸ்லிஃப்டின் இன்டீரியர் ஸ்பை படங்கள் #SpyShots
Posted Date : 20:46 (02/04/2018)
Last Updated : 20:46 (02/04/2018)

 

 மஹிந்திரா XUV 500-ன் இன்டீரியர் ஸ்பை படங்கள் இணையதளத்தில் வெளியாகியுள்ளது. இரண்டு வாரங்களுக்கு முன்புதான் XUV 500 காரின் ஸ்பை படங்கள் வெளியானது. ஆனால், அதில் காரின் இன்டீரியரை காணமுடியவில்லை. தற்போது காரின் இன்டீரியர் ஸ்பை படங்கள் மட்டும் தனியாக வந்துள்ளது. 

 படங்களை வைத்துபார்க்கும்போது, வரவிருக்கும் XUV 500 மாடல், டேன் லெதர் எனப்படும் வெளிர் பிரவுன் நிற சீட்டுகளோடு க்ராஸ் ஸ்டிச்சிங் எனப்படும் டைமன்ட் தையல் வேலைப்பாடுகளுடன் வருகிறது. முன்பு நாம் சொன்னதுபோலவே டேஸ்போர்டு முழுவதும் கருப்பு நிறத்தில் உள்ளது. விலை அதிகமான கார்களில் வருவதுபோல லெதர் போன்ற சாஃப்ட்டான பொருள் டேஷ்போர்டின் மேல் பொருத்தப்பட்டுள்ளது. முந்தைய மாடலில் வரும் மேட் ப்ளாக் போய், இப்போது சென்டர் கன்சோல் பியானோ ப்ளாக் நிறத்தில் உள்ளது மட்டுமில்லாமல் பக்கவாட்டு பகுதிகளில் அலுமினியம் ஃபினிஷிங்கும் உள்ளது. புதிய ஃபோஸ்லிஃப்ட் மாடலில் அலுமினியம் பெடல்கள் வருகிறது. பட்டன்கள் அனைத்துமே பழைய மாடல் போலவே இருக்கிறது. 

ரோட்டரி டயல்களில் க்ளாஸ் ஃபினிஷ் கூடுதலாக வருகிறது. கியர் நாப், சென்டர் ஆர்ம்ரெஸ்ட், ஹேண்ட் பிரேக் லீவர், ஸ்டியரிங் வீல் போன்ற இடங்களில் சில்வர் ஃபினிஷ் வருகிறது. இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்டர் மற்றும் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் அதேதான். அதிக விலை வேரியன்ட்டில் மட்டும் பெரிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் வரலாம்.
கடந்த முறை கிடைத்த ஸ்பை படங்கள் மூலம் வெளிப்புற அப்டேட்டுகளாக ப்ரொஜக்டர் லைட், புதிய க்ரில் டிசைன், ட்ரயாங்கில் வடிவ டெயில் லைட், புதிய டெயில் டிசைன் போன்ற சில மாற்றங்கள் இருந்ததைப் பார்த்தோம். புதிய XUV 500 இந்த மாதம் வெளிவரும் என்று எதிர்பார்ப்புகள் உள்ளது.


- ரஞ்சித் ரூஸோ. 
படங்கள் : team-bhp.com
 
TAGS :   XUV500, மஹிந்திரா, Mahindra cars