ஆஸ்பயர் பேஸ்லிஃப்ட்டை, ஜூன் மாதத்தில் களமிறக்குகிறது ஃபோர்டு!
Posted Date : 14:57 (03/04/2018)
Last Updated : 15:02 (03/04/2018)


ஆஸ்பயர்... ஃபோர்டு நிறுவனத்தின் காம்பேக்ட் செடான், இந்தியாவில் அறிமுகமாகி ஏறக்குறைய 3 ஆண்டுகள் ஆகிவிட்டது. இந்த இடைப்பட்ட காலத்தில், 3,01,394 கார்களை இந்நிறுவனம் நம்நாட்டில் விற்பனை செய்திருக்கிறது. முற்றிலும் புதிய டிகோர், ஏமியோ மற்றும் அடுத்த தலைமுறை டிசையர், அமேஸ் என இந்த செக்மென்ட்டில் புதிய போட்டியாளர்களின் வரவால், ஆஸ்பயரின் பேஸ்லிஃப்ட் மாடலைக் களமிறக்கும் முடிவில் இருக்கிறது ஃபோர்டு. 
 

 
 
ஏப்ரல் மாதத்தில் விற்பனைக்கு வரவிருக்கும் ஃப்ரிஸ்டைல் காருடன், இந்த காம்பேக்ட் செடான் டெஸ்ட்டிங்கில் இருப்பதுபோன்ற படங்கள், இணையத்தில் நீண்ட நாட்களாகப் பரவி வந்தன. இந்நிலையில் புதிதாக வெளிவந்திருக்கும் ஸ்பை படங்களைப் பார்க்கும்போது, கடந்த மார்ச் 15, 2018 அன்று முதல், தற்போது விற்பனையில் இருக்கும் ஆஸ்பயரின் உற்பத்தியை, குஜராத்தில் இருக்கும் தனது தொழிற்சாலையில் நிறுத்திவிட்டதாகத் தகவல்கள் வந்துள்ளன. 
 

 
 
 ஃப்ரிஸ்டைல் காரில் மேற்கொள்ளப்பட்டிருக்கும் மாற்றங்கள், அப்படியே ஆஸ்பயர் பேஸ்லிஃப்ட்டில் இடம்பெறுவதற்கான சாத்தியங்கள் அதிகமாக இருக்கிறது. எனவே க்ரில், ஹெட்லைட், டெயில் லைட், முன்-பின் பம்பர்,பானெட், டெயில்கேட், அலாய் வீல்கள் ஆகியவற்றின் தோற்றத்தில் வித்தியாசம் இருக்கலாம். மேலும் எக்கோஸ்போர்ட்டில் இருப்பதுபோன்ற Floating பாணியிலான 6.5 இன்ச் டச் ஸ்க்ரீன் சிஸ்டம், இங்கும் தொடரலாம். SYNC3, ஆண்ட்ராய்டு ஆட்டோ & ஆப்பிள் கார்ப்ளே வழங்கப்பட்டிருப்பது போனஸ்!
 

 
 
இதனுடன் 96bhp பவர் மற்றும் 12kgm டார்க்கை வெளிப்படுத்தும் புதிய 1.2 லிட்டர் Dragon சீரிஸ் பெட்ரோல் இன்ஜின் - புதிய Getrag 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் கூட்டணி, ஆஸ்பயர் பேஸ்லிஃப்ட்டில் பொருத்தப்படும் எனத் தெரிகிறது. தவிர எக்கோஸ்போர்ட்டில் இருக்கும் 1.5 லிட்டர் Dragon சீரிஸ் பெட்ரோல் இன்ஜின் (123bhp பவர் / 15kgm டார்க்) - 6 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் (Torque Converter) செட்-அப்பும், இதில் இடம்பெறுவதற்கான வாய்ப்பு இருக்கிறது. 1.5 லிட்டர் டீசல் இன்ஜினில் எந்த மாற்றமும் இருக்காது.

 
 - ராகுல் சிவகுரு.
 
 
TAGS :   FORD ASPIRE, FACELIFT, INDIA, GUJARAI, PRODUCTION, FREESTYLE, DRAGON ENGINE, GETRAG GEARBOX, PETROL, DIESEL, TOUCHSCREEN SYSTEM.