ட்வின் சிலிண்டர் போட்டி... நின்ஜா 400 vs 300 vs YZF R3 vs 302R
Posted Date : 16:26 (04/04/2018)
Last Updated : 16:34 (04/04/2018)

 

இளைஞர்களின் கனவு பைக் நிறுவனமாக இருக்கும் கவாஸகி சமீபத்தில் தனது என்ட்ரி லெவல் பர்ஃபாமன்ஸ் பைக்கான நிஞ்சா 400 மாடலை வெளியிட்டுள்ளது. விலையைப் பொருத்தவரை நின்ஜா 300 மற்றும் z650 பைக்குகளுக்கு இடையில் நிற்கிறது நின்ஜா 400. வடிவத்தில் நின்ஜா H2 வரை போலவே டிசைன் செய்யப்பட்டுள்ளது. டூயல் எல்ஈடி ஹெட்லைட்டுகள், ஷார்ப்பான டிசைன், நின்ஜா H2 போல ஸ்பிங் ஆர்ம் மவுன்டிங் பிளேட், downdraft intake, பெரிய இன்டேக் ஏர் பாக்ஸ் என்று பர்ஃபாமன்ஸை மட்டுமே மனதில் வைத்து உருவாக்கப்பட்டது. கவாஸகி இந்தியாவில் வெளியிடும் ஏழாவது நின்ஜா மாடல் இது. 4.69 லட்சம் எனும் எக்ஸ்ஷோரூம் விலையில் வரும் இந்த பைக்கின் தோராய சென்னை ஆன்-ரோடு விலை 5.5 லட்சம். போட்டியாளர்களை விட பல மடங்கு விலை அதிகமாக இருக்கும் இந்த பைக்கின் சிறப்புகளை இதன் போட்டியாளர்களோடு ஒப்பிட்டுப் பார்ப்போம்... 


சென்னை ஆன்-ரோடு விலை

நின்ஜா 400 - 5.5 லட்சம், நின்ஜா 300 - 4.27 லட்சம், யமஹா YZF R3 - 3.93 லட்சம்,

பெனெல்லி 302R - 4.31 லட்சம்


 
டிசைன் 

நின்ஜா பைக்கின் டிசைன் ஷார்ப்பாகவும் ஸ்போர்ட்டியாகவும் உள்ளது. ஸ்பிலிட் LED லைட்டுகளை பைக்குக்கு மாடர்ன் லுக்கை தருகிறது. இந்த பைக்கை பார்த்தால் 1000 சிசி பைக் என்று நினைக்கும் அளவு பைக்கின் தோற்றம் உள்ளது. H2 பைக்கின் இன்ஸிபிரேஷனால் உருவாக்கப்பட்டது என்று சொல்கிறார்கள் கவாஸகி நிறுவனத்தினர். 

நின்ஜா 400

போட்டியாளர்களான நின்ஜா 300 பைக்கின் டிசைன் பழசாகி போய்விட்டது. இந்த பழைய டிசைனுக்கு நியாயம் செய்ய புதிய ஸ்டிக்கருடன் பைக்னை வெளியிடுகிறது கவாஸகி. புதிய ஸ்டிக்கரின் அக்ரஸிவான டிசைன் முதல் பார்வையில் பைக்கை மாடர்னாக காட்டுகிறது. ஆனால் ஹெட்லைட்டுகள், அலாய் வீல், பைக்கின் பின் பக்கம் போன்ற சில பகுதிகள் இதைப் பழைய டிசைன் என்று காட்டிக் கொடுத்துவிடுகிறது. மாடர்ன் டிசைன் இல்லைதான், ஆனால் இதன் ஏரோ டயனமிக்கான பாடி இன்னும் நிறைய இளைஞர்களுக்குப் பிடித்துள்ளது. 

யமஹா YZF R3 கடந்த பிப்ரவரி மாதம்தான் பிஎஸ்-4 இன்ஜினுடன் மீண்டும் பேரளல் ட்வின் போட்டியில் களமிறங்கியுள்ளது. ஷார்ப்பான டிசைன், எல்ஈடி லைட்டுகள், டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கன்சோல், பைலட் லேம்ப் என்று பார்க்கவே மாடர்னாக இருக்கிறது R3. நின்ஜா 400 போல, இதுவும் 1000சிசி R1 பைக்கில் இருந்து வந்த டிசைன். ஆனால், நின்ஜா 400 விட இதன் சிறியதாக இருக்கிறது. யமஹாவின் ரேஸிங் ப்ளூ நிறமும் மாக்மா ப்ளாக் நிறமும் பைக்கின் ஸ்டைலுக்கு பெரிய ப்ளஸ். மற்ற பைக்குகளோடு ஒப்பிடும் போது பெனெல்லியின் 302R தனித்துவமான டிசைன். ஸ்போர்ட்ஸ் டூரிங் பைக் என்பதால் ஸ்போர்ட்ஸ் பைக் போன்ற டிசைன் இருந்தாலும், டூரிங் பைக்கின் பெரிய மற்றும் அதிக எடை கொண்டது போன்ற டிசைனை இதில் உள்ளது. பார்க்கப் பாந்தமாக இருக்கிறது பைக்கின் கிராஃபிக்ஸ். செக்மன்டிலேயே முதல் முதலில் ஏபிஎஸ் பிரேக்குகளோடு வந்த பைக் இது. USD ஃபோர்க்குகள் மற்றும் முன் பக்கம் டிவின் டிஸ்க் பிரேக் கொண்ட ஒரே பைக் இதுதான். 

பர்ஃபாமன்ஸ் 

அனைத்து பைக்குகளுமே என்ட்ரி லெவல் பர்ஃபாமன்ஸ் பைக்குகள்தான். இதில் நின்ஜா 400 பைக்கில் மட்டும் போட்டியாளர்களை விடப் பெரிய 399 சிசி இன்ஜின் உள்ளது. கூடுதலாக எடை குறைவான ட்ரெல்லிஸ் ஃபிரேம் மற்றும் சிறிய பெட்ரோல் டேங்க் உள்ளதால் இதன் எடையும் குறைவு. 49bhp பவர் மற்றும் 173 கிலே எடையோடு, 283.2bhp/tonne என்று செக்மன்டிலேயே அதிக பவர்-எடை விகிதம் கொண்டுள்ளது இந்த பைக். அதாவது ஒரு கிலோ எடை பைக்கில் இருந்து குறைந்தால் 2.83bhp பவர் அதிகம் கிடைக்கும். இந்த விகிதம் பைக்கை கஸ்டமைஸ் செய்பவர்களுக்கு உதவும். 

நின்ஜா 300

39bhp பவர், 172 கிலோ எடை என பவர்-எடை விகிதம் 226.7bhp/tonne உள்ளது. எடை எக்குத்தப்பாக உள்ள பெனெல்லி 302R உடன் ஒப்பிட்டுபார்க்கும்போது இதன் எடை பரவாயில்லை. ஆனால், 27Nm டார்க் என்பது குறைவானது. 

நின்ஜா 400-க்கு பிறகு அதிக பவர்-எடை விகிதம் தரும் பைக் யமஹா R3. 242.7bhp/tonne விகிதம். 300 சிசி பைக் என்றாலும் இதன் 1 கிலோ எடை 2.4bhp பவருக்கு சமமானது. R3 பைக்கில் டெல்ட்டா பாக்ஸ் ஃப்ரேம் இருந்திருந்தால் எடையும், ஹேண்டலிங்கும் அபாரமாக இருந்திருக்கும். ஸ்லிப்பர் க்ளட்ச் மிஸ்ஸிங். புதிய பைக்கில் ஏபிஎஸ் மற்றும் மெட்செலர் டயர்கள் வந்துள்ளது இது, 5 கிலோ எடையைச் சமரசம் செய்துவிட்டது. பவர் அதிகம் ஆனால், டார்க் குறைவு. 

பெனெல்லி 302R

பெனெல்லி 302R இந்தப் போட்டியில் மிகவும் பின்தங்கிவிட்டது. 38.2bhp பவர் மற்றும் 26.5Nm டார்க் என்பது போட்டியாளர்களை விட மிகமிக குறைவு. இதன் 198 கிலோ எனும் அதிக எடை குறைவான இதன் பர்ஃபாமன்ஸை மேலும் குறைக்கிறது. 302R பைக்கின் பவர்-எடை விகிதம் 192.9hp/tonne. 302R பைக் வாங்கியவர்களைச் சமரசம் செய்யும் விதமாக உள்ள ஒரே விஷயம் இதன் எக்ஸாஸ்ட் சத்தம். 

முடிவு 

தொழில்நுட்பம், பர்ஃபாமன்ஸ், டிசைன் என்று நின்ஜா 400 அனைத்திலும் முன்னிலையில் உள்ளது. ஆனால், விலை என்று வரும்போது பின்தங்கிவிடுகிறது. அமெரிக்காவில் நின்ஜா 300 பைக்கின் அதே விலைக்கும், ஐரோப்பியாவில் நின்ஜா 300 விட ரூ.32,000 அதிக விலைக்கும் கிடைத்தாலும் இந்தியாவில் 1 லட்சம் வரை விலை அதிகம். நின்ஜா 300 பழைய பைக் என்றாலும், என்ட்ரி லெவல் பர்ஃபாமன்ஸுக்கு ஏற்றது. 4.27 லட்சம் எனும் இதன் ஆன்ரோடு விலையும் யமஹாவை பொருத்தவரை அதிகம் என்றே தோன்றுகிறது. ஆன்-ரோடு விலை 4 லட்சம் கூட தொடாத நிலையில் ப்ராக்டிக்கலாகவும், பவர்ஃபுல்லாகவும் இருக்கிறது யமஹா R3. பெனல்லியின் 302R பைக், பெரிய பைக் வேண்டும் ஆனால் அதிக பவர் தேவையில்லை என்பவர்களுக்கானது. டூரிங் போவதற்கு பைக் நன்றாக இருந்தாலும் பவர் குறைவு என்பது யோசிக்கவைக்கிறது.


- ரஞ்சித் ரூஸோ.
 

 

TAGS :   கவாஸகி நின்ஜா