விலை உயர்ந்தன பஜாஜ் பைக்குகள்...
Posted Date : 19:07 (04/04/2018)
Last Updated : 10:40 (05/04/2018)

 

இரண்டு நாள்களுக்கு முன்புதான் டிவிஎஸ் தனது அப்பாச்சி RR310 பைக்கின் விலையை உயர்த்தியது. தற்போது பஜாஜ் நிறுவனமும் எந்த அறிவிப்புமின்றி தனது பைக்குகளின் விலையை உயர்த்தியுள்ளது. கடந்த வாரம் டொமினார் 400 பைக்கின் விலையை ரூ.2000 வரை அதிகரித்திருந்த இந்நிறுவனம். தற்போது அதன் பல்ஸர் RS200, அவென்ஜர், V, டிஸ்கவர் மற்றும் பிளாட்டினா பைக்குகளின் விலையையும் அதிகரித்துள்ளது. விலை எவ்வளவு உயர்ந்துள்ளது என்று பார்ப்போம்.
 
 
பஜாஜ்
 
 
பஜாஜ் பல்ஸர் RS200 பைக்கின் விலை ரூ.1,800 உயர்ந்துள்ளது. RS200 ஏபிஎஸ் வேரியன்டின் விலை ரூ.1,55,590. Std வேரியன்டின் விலை ரூ. 1,43,690. RS மட்டுமல்ல பல்ஸர் NS200 பைக்கின் விலையும் உயர்ந்துள்ளது. ரூ.1700 விலை கூடி, இப்போது பல்ஸர் NS200 1,13,400 ரூபாயாக உள்ளது.  அவென்ஜர் 220 ஸ்ட்ரீட் மற்றும் க்ரூஸ் மாடல்களின் விலை தோராயமாக 1000 ரூபாய் வரை அதிகரித்துள்ளது. இந்த பைக்கின் ஆன்-ரோடு விலை ரூ.1,07,200. சமீபத்தில் வெளியான அவென்ஜர் 180 பைக்கும் ரூ.1,100 விலை கூடியுள்ளது. தற்போது அவென்ஜர் 180 பைக்கின் தோராய விலை ரூ.98,300.
 
 
 
V12 பைக்கின் விலையில் எந்த மாற்றமும் இல்லை. ஆனால், V15 பைக் ரூ.1000 விலை ஏற்றம் கண்டுள்ளது. தற்போது இந்த பைக்கின் விலை ரூ.76,500. இந்த ஆண்டு வெளியான டிஸ்கவர் 125 பைக்கின் விலை std வேரியன்ட் 500 ரூபாயும், டிஸ்க் வேரியன்ட் 1000 ரூபாயும் விலை கூடியுள்ளது. விலை உயர்ந்த டிஸ்க் பிரேக் வேரியன்டின் தற்போதைய விலை ரூ. 66,950. பஜாஜ் பிளாட்டினாவின் விலை ரூ.500 அதிகரித்து தற்போது ரூ.55,420 எனும் விலையில் விற்பனையாகிறது. பஜாஜ், டிவிஎஸ் மட்டுமல்ல மற்ற பைக் மற்றும் கார் நிறுவனங்களும் இந்த நிதியாண்டில் விற்பனையை அதிகரிக்கவுள்ளது. 
 
(மேலே குறிப்பிட்ட அனைத்துமே தோராயமான சென்னை ஆன்-ரோடு விலை.)
 
-ரஞ்சித் ரூஸோ.
 
TAGS :   பஜாஜ், பல்ஸர், டொமினார், டிஸ்கவர், அவென்ஜர்