மஹிந்திரா XUV500 ஃபேஸ்லிஃப்டின் வேரியன்டுகள் வெளியாகியுள்ளன...
Posted Date : 18:24 (05/04/2018)
Last Updated : 18:27 (05/04/2018)
 
ஏப்ரல் மாதம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படும் மஹிந்திரா XUV 500 ஃபேஸ்லிஃப்ட் மாடலின் ஸ்பை படங்கள் சமீப காலமாக வெளியாகிவந்து கொண்டிருக்கிறது. தற்போது XUV 500 எந்தெந்த வேரியன்டில் வெளியாகவுள்ளது என்ற தகவலும் வந்துள்ளது. 
 
மொத்தம் 5 டீசல் மற்றும் 1 பெட்ரோல் இன்ஜின் வேரியன்டுகளாக வெளியாகவுள்ள XUV500 ஃபேஸ்லிஃப்ட் பழைய காரை விட மாறுபட்ட கேபின், வடிவமைப்பு, வசதிகள், நிறம் என்று பல விஷயங்களில் புதிதாக உள்ளது. விலையும் 25,000 முதல் 30,000 வரை கூடுதலாக வரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. டாப் வேரியன்டில் மட்டுமே இன்ஜின் ரீ டியூன் செய்யப்பட்டுள்ளது. மேலும், டீசல் இன்ஜினுடன் ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் ஆப்ஷனும் வருகிறது. இப்போது வேரியன்டுகளையும் அதன் வசதிகளையும் பார்ப்போம். 
 
மஹிந்திரா XUV500
 
பேஸ் வேரியன்டான XUV 500 W5 காரில் பழைய காரில் உள்ள அதே இன்ஜின் மற்றும் கியர்பாக்ஸ்தான். 140bhp பவர் கொண்ட 2.2 லிட்டர் டீசல் இன்ஜின் மேலுவல் கியர்பாக்ஸ் கூட்டணி. இன்டீரியர்களை பொருத்தவரை ப்ளாக் மற்றும் கிரே நிறத்தில் வருகிறது. லெதர் சீட்டுகள் கிடையாது. சாதாரண சீட்டுதான். முன்பக்கம் மட்டுமே மொபைல் சார்ஜர் வருகிறது. ஆனால், பின் பக்க வாஷர் மற்றும் வைப்பர் வருகிறது. ஃபாலோ மீ ஹெட்லைட் (இரவில் காரை பார்க் செய்துவிட்டுக் கிளம்பும்வரை உங்களுக்கு ஒளி அடித்து வழி காட்டும்), ரிமோட் டெயில் கேட் ஓப்பனிங், ப்ளாட்டாக மடிக்கக்கூடிய பின் பக்க சீட்டுகள், முன் மற்றும் பின் பக்கம் ஏசி, ஸ்டில் வீல்கள் வருகின்றன. 
 
அடுத்த வேரியன்டான XUV 500 W7 காரில் பேஸ் வேரியன்டில் வந்த அதே இன்ஜின்தான். ஆனால், ஆட்டோமெடிக் கியர்பாக்ஸ் ஆப்ஷன் வருகிறது. இன்டீரியர் நிறங்கள் இந்த வேரியன்டில் ப்ளாக் மற்றும் டேன் நிறத்தில் இருக்கிறது. இதிலும் லெதர் சீட்டுகள் இல்லை. முன்பக்க க்ரோம் க்ரில், ஆட்டோமெடிக் கிளைமேட் கன்ட்ரோல், க்ரூஸ் கன்ட்ரோல், ஸ்டியரிங்கில் ஆடியோ கன்ட்ரோல் பட்டன்கள், ஸ்மார்ட்-கீ போன்ற ஆப்ஷன்கள் வருகின்றன. 
 
மஹிந்திரா XUV 500 இன்டீரியர்
 
XUV 500 W9 வேரியன்டில் W7 வேரியன்டில் இருக்கும் அதே இன்ஜின் மற்றும் கியர்பாக்ஸ் ஆப்ஷன்தான். அதே இன்டீரியர்தான் ஆனால், பியானோ ப்ளாக் சென்டர் கன்சோல் வருகிறது. அட்ஜஸ்ட் செய்யக்கூடிய டெலஸ்கோப்பிக் ஸ்டியரிங், ரிவர்கஸ் பார்க்கிங் கேமரா, முன் மற்றும் பின்பக்க மொபைல் சார்ஜிங், ப்ளூசென்ஸ் மற்றும் ஆன்ட்ராய்ட் ஆட்டோ உள்ள இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், 17 இன்ச் அலாய் வீல்கள் வருகின்றன. 
 
மஹிந்திரா XUV 500 டேஷ் போர்டு
 
டாப் வேரியன்டான XUV 500 W11 கார் 2 மற்றும் 4 வீல் டிரைவ் சிஸ்டத்துடன் வருகிறது. 2 வீல் டிரைவ் காரில், இன்ஜின் முந்தைய வேரியன்டில் இருக்கும் 140bhp இன்ஜின்தான். ப்ளாக் மற்றும் டேன் நிற லெதர் சீட்டுகள். கூடுதலாக டேஷ்போர்டு மற்றும் டோர் பேடுகளில் சாஃப்ட்டான லெதர் ஃபினிஷிங்கும் வருகிறது. காரின் வெளியே சில இடங்களில் க்ரோம் வேலைப்பாடுகள், எலக்ட்ரிக் அட்ஜஸ்டபில் டிரைவர் சீட், படுல் லேம்ப் (காரில் இருந்து இறங்கும்போது தடுக்கிவிழாமல் இருக்க காருக்கு கீழே எரியும் LED லைட்) போன்றவை டாப் வேரியன்டில் மட்டும் வரும் வசதிகள். 4 வீல் டிரைவ் மாடல் காருடன் 155bhp பவர் கொண்ட 2.2 லிட்டர் டீசல் இன்ஜின் வருகிறது. 17 இன்ச் அலாய் வீல் வந்தாலும், ஆப்ஷனலாக 18 இன்ச் டைமன்ட் கட் அலாய் வீல்கள் வருகின்றன. 
 
XUV 500 ஃபேஸ்லிஃப்ட் காரின் இன்டீரியர் மற்றும் எக்ஸ்டீரியர் ஸ்பை படங்களுக்கு இங்கே சொடக்கவும். 
 
 
- ரஞ்சித் ரூஸோ. 
 
TAGS :   மஹிந்திரா XUV500