ரூ.2,000 விலைகுறைந்தது டிவிஎஸ் ஸ்கூட்டர்
Posted Date : 16:45 (06/04/2018)
Last Updated : 16:45 (06/04/2018)

 

சமீபத்தில் ஆட்டோமெபைல் நிறுவனங்கள் தங்கள் கார் மற்றும் பைக்கின் விலைகளை உயர்த்திவருகின்றன. டிவிஎஸ் நிறுவனமும் கடந்த வாரம்தான் அப்பாச்சி RR310 பைக்கின் விலையை ரூ.8000 வரை உயர்த்தியிருந்தது. ஆனால், ஆச்சர்யமான இப்போது விலை குறைப்பு நடந்துள்ளது. 

டிவிஎஸ் வீகோ
 
டிவிஎஸ் தனது வீகோ ஸ்கூட்டரின் விலையை ரூ.2000 வரை குறைத்துள்ளது. ரூ.52,659 என்ற எக்ஸ்ஷோரூம் விலை இப்போது ரூ.50,659 என்று மாற்றப்பட்டுள்ளது. இந்த ஸ்கூட்டரின் தோராயமான சென்னை ஆன்ரோடு விலை ரூ.63,000 முதல் ரூ.66,000 ஆகும். டிஸ்க் மற்றும் டிரம் பிரேக் என இரண்டு வேரியன்டுகளாக வருகிறது வீகோ. சமீபகாலமாக வீகோ ஸ்கூட்டரின் விற்பனை குறைந்து வரும் நிலையில் விலை குறைப்பு மூலம் விற்பனையை அதிகரிக்க முயற்சி செய்கிறது டிவிஎஸ். கடந்த பிப்ரவரி மாதம் மட்டும் 1,901 வீகோ ஸ்கூட்டர்கள் விற்பனையாகியுள்ளன. டிவிஎஸ் விகோவில், ஜூபிட்டரில் இருக்கும் அதே 109.7 சிசி இன்ஜின்தான் உள்ளது. 8bhp பவரும் 8.4Nm டார்க்கும் வெளிப்படுத்தக்கூடியது இந்த இன்ஜின். ஃபேமிலி ஸ்கூட்டர் வாங்க நினைப்பவர்கள் மத்தியில் நல்ல தேர்வாக வலம்வரும் வீகோ, ஜூபிட்டரின் வரவுக்குப் பின் விற்பனையில் சரிந்துவிட்டது. ஃபுல் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கன்சோல், பவர் மற்றும் எகோ மோடு இன்டிகேட்டர், சீட்டுக்கு வெளியே இருக்கும் பெட்ரோல் கேப், சீட்டுக்கு கீழே மொபைல் சார்ஜர் மற்றும் எல்ஈடி லைட் என்று பல வசதிகள் இதில் உள்ளது.
 
 
 
ஆக்டிவா-i, சுஸுகி லெட்ஸ், ஹீரோ ப்ளெஷர், யமஹா ரே போன்ற ஸ்கூட்டர்களோடு போட்டிபோடுகிறது வீகோ. மற்ற ஸ்கூட்டர்களை ஒப்பிடும்போது வீகோவில் சிறப்பம்சங்கள் எப்படி அதிகமோ அதே போல விலையும் அதிகம். ஆக்டிவா-i விலை இதைவிட 10,000 ரூபாய் குறைவு ஆனால், டிஸ்க் பிரேக், டிஜிட்டல் மீட்டர், இடவசதி, மைலேஜ் என்று நிறைய விஷயங்கள் இல்லை. வீகோவை விட ஜூபிட்டரின் விலை குறைவாகவும் அதே அளவு அம்சங்கள் இருந்ததாலும் ஜூபிட்டர் நல்ல விற்பனையில் உள்ளது.
 
- ரஞ்சித் ரூஸோ.
 
 
TAGS :   டிவிஎஸ் வீகோ