பல்ஸர் பாடி, டியூக் இன்ஜின்... வரப்போகிறது புதிய 220!
Posted Date : 12:49 (07/04/2018)
Last Updated : 13:01 (07/04/2018)
 
பஜாஜ் புதிய பல்ஸர் பைக்குகளை உருவாக்கிவருகிறது. மோனோ ஷாக் சஸ்பன்ஷன், FI தொழில்நுட்பம், ஏபிஎஸ் பிரேக் மற்றும் புதிய பிஎஸ்-6 இன்ஜின் என்று அப்டேட்டுகள் குவிந்துள்ளது. அடுத்த தலைமுறை பல்ஸராக இருக்கப்போகும் இவை 150 மற்றும் 220 மாடல்களின் மேல் கட்டமைக்கப்படுகிறது. 


பல்ஸர் 220
 
இன்ஜின்களை பொருத்தவரை புதிய பல்ஸர் 150 முதல் 250சிசி இன்ஜின்கள் வரை வரலாம் என்று தகவல்கள் வந்துள்ளது. பல்ஸர் வரிசையில் 135, 150, 180, 200 பைக்குகள் இருந்தாலும், 150 மற்றும் 220 பைக்குகள் மட்டுமே நல்ல விற்பனையைத் தருகிறது. 135 பைக்கின் விற்பனை ஆரம்பம் முதல் மந்தமாகவே இருந்துள்ளது. 180 பைக்கை பொருத்தவரை பல்ஸர் ஸ்டைல் விரும்பிகளுக்கு விலை குறைவாக அதே ஸ்டைலில் 150 கிடைக்கிறது. பர்ஃபார்மன்ஸ் விரும்பிகளுக்குச் சிறப்பான தொழில்நுட்பம் மற்றும் கூடுதல் ஸ்டைலாக, அதே விலையில் விலையில் 160NS கிடைப்பதால் 180-யின் விற்பனை குறைந்துவிட்டது. அதனால், இந்த இரண்டு பைக்குகளும் 2019 முதல் நிறுத்தப்படும். அதற்குப் பதில் புதிதாக வடிவமைக்கப்படும் பிஎஸ்-6 இன்ஜினுடன் பல்ஸரின் 150சிசி பைக்கும், 250சிசி பைக்கும் வரும்.

பல்ஸர் 220

தற்போது இந்தியாவில் 250சிசி இன்ஜின் கொண்ட பைக்குகளாக யமஹா FZ 25, ஃபேஸர் 25 மற்றும் கேடிஎம் டியூக் 250 மட்டுமே உள்ளது. மந்தமான இருக்கும் இந்த செக்மன்ட்டை பஜாஜின் 250சிசி பைக் மீண்டும் உயிர்ப்பித்துக் கொண்டுவரலாம். பல்ஸர் 220 பாடியில் வரும் 250சிசி பைக், பல்ஸர் இன்ஜினை அடிப்படையாக வைத்தே வரும். ஏற்கனவே பல்ஸர் 180 பாடியில் பல்ஸர் 150 வந்துவிட்டதால் அதிக ப்ரீமியம் லுக்கை தருவதற்காக 220 பைக்கின் டிசைன் மாற்றியமைக்கப்படும். செமி ஃபேரிங் நிச்சயம் உண்டு மக்களே. 

பல்ஸர் 220
 
தற்போது பஜாஜ் நிறுவனத்திடம் டியூக்கின் 250சிசி இன்ஜின் இருப்பதால் விலை கூடுதலாகவும் பர்ஃபார்மன்ஸ் அதிகமாகவும் வைத்து 250NS மற்றும் 250RS பைக்குகள் விற்பனைக்கு வரலாம். அடுத்த ஆண்டின் துவக்கத்தில் இந்த பைக்கை பற்றி சில தகவல்களை சொல்வதாக பஜாஜ் கூறியுள்ளார்கள். தற்போது இதைவிட பவர்ஃபுல்லான, மாடர்ன்னான பைக்குகள் விற்பனைக்கு வந்துவிட்டாலும், வேகப் போட்டியைத் துவக்கிவைத்த பல்ஸரின் 220-யின் மேல் மக்களுக்கு உள்ள காதல் எப்போதுமே குறையாது.

- ரஞ்சித் ரூஸோ.
TAGS :   பஜாஜ் பல்ஸர் 220, பல்ஸர் 180, பல்ஸர் 150, பர்ஃபார்மன்ஸ் 150, வேகமான 220