நெடுஞ்சாலையை அளக்க புதிய முறை அறிமுகம்... டோல் கட்டணம் உயருமா?
Posted Date : 15:37 (07/04/2018)
Last Updated : 15:42 (07/04/2018)

 

இந்தியாவின் பெரிய போக்குவரத்தாக இருப்பது சாலை போக்குவரத்து. 66 லட்சம் கிலோமீட்டர் அளவு சாலைகள் இங்கு உள்ளன. இங்கே புதிதாக கட்டப்படும் நெடுஞ்சாலை மற்றும் விரைவு சாலைகளை இதுவரை linear length method என்ற முறையில் அரசு அளந்துவருகிறது. ஒரு வாகனம் அந்தச் சாலையை கடக்க எத்தனைக் கிலோமீட்டர் தூரம் எடுத்துக்கொள்கிறதோ அதுதான் linear length அளவு முறை. ஏப்ரல் மாதம் முதல் அமெரிக்க, ஐரோப்பியா போன்ற நாடுகள் பயன்படுத்தும் lane kilometre எனும் புதிய முறைக்கு மாறவுள்ளதாகக் கூறியுள்ளார் மத்திய நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி.

 

நிதின் கட்கரி 


நாம் பயன்படுத்திவந்த linear length முறையில் முழு சாலையையும் ஒரே லேனாக கணக்கெடுப்பது வழக்கம். ஆனால், லேன் கிலோமீட்டர் முறையில் சலையில் எத்தனை லேன் உள்ளதோ அதற்கேற்ப சாலையை அளவிடுவார்கள். உதாரணத்துக்குச் சென்னை-கொல்கத்தா நெடுஞ்சாலை லினியர் முறையில் 1,533 km என்றால், இந்தச் சாலையில் நான்கு லேன்கள் உள்ளதால் லேன் கிலோமீட்டர் முறையில் நான்குமடங்கு அதிகரித்து மொத்தம் 6132 கிலோமீட்டர் எனக் கணக்கிடப்படும். இந்த புதிய திட்டம் இன்னும் கிடப்பில்தான் உள்ளது, அடுத்த வாரம் நடைமுறைக்கு வரலாம். 
 
 
நெடுஞ்சாலை

 
'இந்த முறையைத்தான் தற்போது அனைத்து உலகநாடுகளும் பயன்படுத்துகிறது. இதன் மூலம் எவ்வளவு கிலோ மீட்டர் சாலையை உருவாக்குகிறோம் என்பது துல்லியமாக்க தெரியும்,' என்று நிதின் கட்கரி கூறியுள்ளார். தேசிய நெடுஞ்சாலை ஆணையம் கடந்த 5-ம் தேதி நடத்திய சந்திப்பில் இந்த ஆண்டு எவ்வளவு தூரம் புதிய சாலைகளை கட்டமைக்கப்போகிறது என்பதை இந்த லேன் கிலோமீட்டர் முறையிலேயே தந்துள்ளது. கடந்த ஆண்டு மொத்தம் 9,829 கிலோ மீட்டர் சாலைகளை கட்டமைத்துள்ளனர் நெடுஞ்சாலை துறையினர். புதிய முறையில் கணக்கிட்டால் இது 34,378 கிலோ மீட்டர் அளவு. இந்த ஆண்டு, தினசரி கணக்காக 41 கி.மீ சாலையைக் கட்டவேண்டும் என்று முடிவுசெய்துள்ளனர். 
 

லேன் கிலோமீட்டர் முறையில் கட்டமைக்கப்படும் சாலைகள் இரண்டு முதல் நான்கு மடங்கு அதிகமானதாகப் பதிவுசெய்யப்படும். டோல் கட்டணம் என்பது சாலையின் அளவைப் பொருத்து வாங்கப்படுகிறது. தற்போது டோல் கட்டணத்தில் மாற்றம் இல்லை என்றாலும், எதிர்காலத்தில் மாற்றம் ஏற்பட வாய்ப்புள்ளது.
 
 
- ரஞ்சித் ரூஸோ. 
 
TAGS :   நெடுஞ்சாலை துறை, டோல் கட்டணம், நிதின் கட்கரி