5 மாதங்களில் 1 லட்சம் ஸ்கூட்டர்கள் விற்பனை...ஹோண்டாவை மகிழ்வித்த கிராஸியா #GraziaMoments
Posted Date : 17:31 (07/04/2018)
Last Updated : 17:33 (07/04/2018)

 

ஹோண்டா மோட்டார்சைக்கில் நிறுவனத்தின் கிராஸியா ஸ்கூட்டர் 125cc ஸ்கூட்டர் வரிசையில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. வெளியாகிய 5 மாதங்களில் 1 லட்சம் கிராஸியா ஸ்கூட்டர்கள் விற்பனையாகியுள்ளதாக ஹோண்டா நிறுவனம் கூறியுள்ளது. 

 

ஹோண்டா கிராஸியா
 
ஆக்டிவாவின் இன்ஜின்தான் என்றாலும், டிசைன், வசதிகள், பர்ஃபார்மன்ஸ் என்று அனைத்திலும் ஆக்டிவாவை விட அதிகம். கடந்த நவம்பர் மாதம் வெளியாகிய கிராஸியா 125cc ஸ்கூட்டர் செக்மன்டிலேயே 5 மாதத்தில் 1 லட்சம் விற்பனையான முதல் ஸ்கூட்டர் என்ற பெருமையை அடைந்துள்ளது. ஃபுல் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கன்சோல், எல்ஈடி லைட்டுகள் என்று ட்ரெண்டுக்கு ஏற்றவாறு இருக்கிறது. 
 
 
 ஹேண்டா கிராஸியா

 
ஆண்களுக்கான ஸ்கூட்டர் என்று விற்பனை செய்யப்படும் கிராஸியாவில் வசதிகளைப் பொருத்தவரை LED டூயல் ஹெட்லைட், முன் பக்க டிஸ்க் பிரேக், (டீலக்ஸ் வேரியன்ட்டில் மட்டும்), டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கன்சோல், 3-ஸ்டெப் எக்கோ இண்டிகேட்டர், முன் பக்க அப்ரானில் திறந்து மூடும் வசதிகொண்ட ஸ்டோரேஜ் பாக்ஸ், 12V பவர் ஸாக்கெட், CBS பிரேக்கிங் சிஸ்டம் என்று அதிகமோ அதிகம். டிஜிட்டல் டேக்கோ மீட்டர்கொண்ட முதல் ஸ்கூட்டர் - கிராஸியாதான். இதன் கீ-ஸ்லாடில் இக்னிஷன் ஆன், சைடு லாக், சீட் ரிலீஸ், சென்ட்ரல் லாக்கிங் என்று 4-இன்-1 வசதி உள்ளது. கிராஸியாவின் ஸ்டைலிங் அக்ரஸிவாக உள்ளது. ஷார்ப்பான டிசைன், அலுமினியம் ஃபூட் பெக்ஸ், டெலஸ்கோப்பிக் சஸ்பன்ஷன், அலாய் வீல் என ஸ்டைலிங்கும் குறையில்லாமல் உள்ளது. கிராஸியாவில் 5.3 லிட்டர் கொள்ளளவு கொண்ட பெட்ரோல் டேங்க்தான். சிட்டியில் கிராஸியாவின் மைலேஜ் - 50.6 கி.மீ. நெடுஞ்சாலையில் - 57.6 கி.மீ. ஏப்ரிலியா SR125, சுஸுகி ஆக்ஸஸ் 155 மற்றும் என்டார்க் 125 ஸ்கூட்டர்களோடு போட்டிபோடும் கிராஸியா மக்கள் மத்தியில் போட்டியாளர்களை விட அதிக வரவேற்பைப் பெற்றுள்ளது தெரிகிறது. 

 
- ரஞ்சித் ரூஸோ.
 
TAGS :   ஹோண்டா கிராஸியா, ஹோண்டா ஸ்கூட்டர், விற்பனை சாதனை, ஸ்கூட்டர் விற்பனை