வெளிவந்தது யமஹாவின் 2018 ஃபேஸினோ
Posted Date : 20:12 (07/04/2018)
Last Updated : 20:20 (07/04/2018)

 

யமஹா இந்தியா தனது 2018 ஃபேஸினோ மாடல் ஸ்கூட்டரை வெளியிட்டுள்ளது. தற்போது இருக்கும் ஃபேஸினோ ஸ்கூட்டர்களுக்கு பதிலாக விற்பனையாக இருக்கும் 2018 ஸ்கூட்டர்கள் புதிய நிறங்களில் வந்துள்ளது. இந்த மாடல்களுடன் சேர்த்து, யமஹாவில் முதல்முதலாக கிளாமரஸ் கோல்ட் என்ற நிறத்தையும் வெளியிட்டுள்ளது. சிறிய பாடி டிஸைன் மற்றும் புதிய கிராஃபிக்ஸ் உடன் வருகிறது ஃபேஸினோ. முன் பக்க ஆப்ரானில் க்ரோம் ஃபினிஷிங்கும், ஃபென்டர்களில் ஃபேஸினோ பிராண்டிங்கும் வருகிறது. 

யமஹா ஃபேஸினோ

இன்ஜின் மற்றும் பர்ஃபார்மென்ஸில் எந்த மாற்றமும் இல்லை. விலையும் அதேதான். புதிதாக வந்துள்ள ஃபேஸினோ  Glamorous Gold, Dapper Blue, Beaming Blue, Dazzling Grey, Sizzling Cyan, Spotlight White மற்றும்  Sassy Cyan என ஏழு வண்ணங்களில் வருகிறது. இதில்  sassy cyan நிறத்தைத் தவிர அனைத்துமே புதிய நிறங்கள்தான். பழைய ஃபேஸினோவில் வரும்  fusion red நிறம் கைவிடப்பட்டுவிட்டது. பைக்கின் பின்னாடி உக்காந்து வருபவர்களுக்கு வசதியாக கிராப் ரயில் கொஞ்சம் மேலே ஏற்றப்பட்டுள்ளது. டூயல் டோன் சீட்டுகள் புது வரவு. இன்ஜினில் எந்த மாற்றமும் இல்லை.

யமஹா ஃபேஸினோ
(விற்பனை நிறுத்தப்பட்ட fusion red நிறம்)
 
யமஹாவின் ஸ்கூட்டர்களில் அதிக விற்பனையைத் தருவது ஃபஸினோ. ஸ்டைல் மட்டும் அல்ல, நல்ல மைலேஜும் தரும். 113 சிசி கொண்ட இதன் இன்ஜின், 7 bhp பவரும் 0.81  kgm டார்க்கும் தரக்கூடியது. சீட்டுக்கு அடியில் 21 லிட்டர் ஸ்டோரேஜ் ஸ்பேஸ், 5.2 லிட்டர் பெட்ரோல் டேங்க், முன்பக்கம் மொபைல் போன் வைப்பதற்கு இடம், 45 முதல் 50 கி.மீ மைலேஜ் போன்றவை இந்த ஸ்கூட்டரில் இருக்கிறது. எடையும் 103 கிலோதான். டிஸ்க் பிரேக் இல்லாததும், இன்ஜின் பவர் குறைவாக இருப்பதும் இந்த ஸ்கூட்டரின் பெரும் குறைகளாக இருக்கின்றன. 
 
- ரஞ்சித் ரூஸோ.
TAGS :   யமஹா ஃபேஸினோ, யமஹா ஸ்கூட்டர்கள், யமஹா மோட்டார்சைக்கில்ஸ்