சுஸுகியின் 300சிசி பைக்கின் படங்கள் வந்துவிட்டது...பைக்கில் என்ன ஸ்பெஷல்?
Posted Date : 14:09 (12/04/2018)
Last Updated : 14:03 (13/04/2018)


ஜப்பான் நிறுவனமான சுஸுகியின் சீன கூட்டாளியான ஹாவ்ஜு நிறுவனம், 300சிசி பைக் பேடன்ட் ஒன்றை பதிவுசெய்துள்ளது. சுஸுகியின் GW250/இனாசுமா மற்றும் GSX250R பைக்கின் பேடன்டுகள் இந்த நிறுவனத்திடம்தான் உள்ளது. ஆட்டோ கார் ரிப்போர்ட்டின் படி HJ300 எனும் இந்த பைக்கை GSX-S300 என்ற பெயரில் சுஸுகி தயாரிக்கவுள்ளது.

சுசூகி 300சிசி பைக்


HJ300 பைக்கின் இன்ஜின் பற்றி எந்த தகவலும் இன்னும் வெளியாகவில்லை. படத்தில் இருக்கும் இன்ஜின் GW250 இன்ஜின்போல இல்லை. இந்த பைக்கில் 299சிசி லிக்விட் கூல்டு பேரலல் ட்வின் இன்ஜின் வருவதற்கு வாய்ப்புள்ளதாகக் கூறுகிறார்கள். 30 முதல் 34bhp பவர், 25Nm டார்க் தரும்விதம் டியூன் செய்யப்படும் என்றும் சொல்கிறார்கள்.சுசூகி 300சிசி பைக்

வெளியாகியிருக்கும் பேடன்ட்டை பார்க்கும்போது, பைக் மாடர்ன் டிசைனில் அக்ரஸிவாக காட்சிதரும் விதம் வடிவமைக்கப்பட்டுள்ளது. கைகளால் செதுக்கியது போல இருக்கும் chiselled LED ஹெட்லைட்டுகள் மற்றும் தடிமனான USD ஃபோர்க் பைக்கை யமஹா MT-06 போன்று பெரிதாகவும், அக்ரஸிவாகவும் காட்டுகிறது. பைக்கின் பெட்ரோல் டேங்க் மற்றும் டெயில் செக்ஷன் ஷார்ப்பான ஏரோடயனமிக் கட்டுகளோடு வடிவமைக்கப்பட்டுள்ளது. ஃபுல் டிஜிட்டல் இன்ட்ரூமென்ட் கன்சோல் இந்த உள்ளது. இந்த பைக்கில் புதிய ஃபிரேம் டிசைன் வருகிறது. முன்பு ஹாவ்ஜு பைக்குகளில் இருந்த ஸ்டீல் பாக்ஸ் செக்ஷன் ஸ்விங்ஆர்ம் இப்போது அலுமினியமாக மாற்றப்பட்டுள்ளது. டிஸ்க் மற்றும் டூயல் சேனல் ஏபிஎஸ் ஸ்டான்டர்டாக வருகிறது.


சுசூகி 300சிசி பைக்


சுஸுகி GSX-S300 பைக், இந்த ஆண்டு நடைபெறும் ஜெர்மனி மோட்டார் ஷோ அல்லது மிலன் மோட்டார் ஷோவில் காட்சிப்படுத்தப்பட்ட வாய்ப்புள்ளது. 200 முதல் 400சசி இன்ஜின் பைக்குகளின் சந்தை வளர்ந்துவரும் நிலையில் சுஸுகி இந்த 300சிசி பைக்கை 2019-ம் ஆண்டு கொண்டு வருவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளது. 300சிசி சந்தையில் விற்பனை இருக்கும் என்று சுஸுகி நிறுவனம் நம்பும்பட்சத்தில் அடுத்த 2 ஆண்டுகளில் இந்த பைக்கை எதிர்பார்க்கலாம்.

சுசூகி 300சிசி பைக்

இனஸுமா போன்று இந்தப் பைக்கும் சீனாவில் இருந்து இறக்குமதி செய்யவே அதிக வாய்ப்புகள் உள்ளது. இந்தியாவுக்கு வரும் என்றால் இந்த பைக்கின் விலை ரூ.3 லட்சம் முதல் 4 லட்சம் வரை இருக்கும். GSX-S300 பைக், பெனெல்லி TNT 300i, கவாஸாகி Z250 பைக்குகளுடன் போட்டிபோடவுள்ளது. BMW G 310 R விரைவில் வெளியாகவுள்ளதால் GSX-S300 வெளிவரும்போது அதுவும் போட்டிக்கு களத்தில் இருக்கும்.


ரஞ்சித் ரூஸோ.

TAGS :   சுசூகி 300சிசி பைக்