டிவிஎஸ் அப்பாச்சி 160 பைக்கின் ரேஸ் எடிஷன்
Posted Date : 03:13 (14/04/2018)
Last Updated : 03:16 (14/04/2018)

 

டிவிஎஸ் மோட்டார்ஸ் தனது அப்பாச்சி RTR 160 பைக்கின் புதிய நிறத்தை விற்பனைக்குக் கொண்டுவந்துள்ளது. பழைய RTR 160 பைக்கின் ஸ்பெஷல் எடிஷன் மாடலாக வரும் இந்த பைக்கில் எந்த மெக்கானிக்கல் அப்டேட்டும் இல்லை. புதிய நிறம் மற்றும் மாறுபட்ட ஸ்டிக்கர்களோடு வருகிறது. ரேஸ் எடிஷன் எனும் இந்த மாடல் சிங்கள் டிஸ்க் மற்றும் டூயல் டிஸ்க் என இரண்டு வேரியன்டுகளாக வருகிறது. சாதாரண பைக்கை விட 1,000 ரூபாய் கூடுதல் விலை. 

அப்பாச்சி 160

ரேஸ் எடிஷன் அப்பாச்சி வெள்ளை நிறத்தில் பெட்ரோல் டேங்க், முன்பக்க மட்கார்டு, பின்பக்க பாடி பேனல் போன்ற இடங்களில் சிகப்பு நிற ஸ்டிரைப் டிசைன் ஸ்டிக்கர்களோடு வருகிறது. பைக்கின் பிரேக் லீவர் அருகில் இருக்கும் இன்ஜின்கார்டில் hyper edge-க்கு பதிலாக TVS Racing என்ற ஸ்டிக்கரும், பெட்ரோல் டேங்கில் அப்பாச்சி ஸ்டிக்கருக்கு பதிலாக டிவிஎஸ்ஸின் குதிரை லோகோவும் வருகிறது. ரேஸ் எடிஷன் அப்பாச்சி 160 பைக்கில் 15 bhp பவர் மற்றும் 13 Nm டார்க் தரக்கூடிய 159.7சிசி இன்ஜின் வருகிறது. இந்த பைக்கின் விலை ரூ.89,524 (டூயல் டிஸ்க்) மற்றும் ரூ.87,395 (சிங்கள் டிஸ்க்). 


 அப்பாச்சி 160


கடந்த மாதம்தான், டிவிஎஸ் தனது புதிய அப்பாச்சி RTR 1604V மாடல் பைக்கை அறிமுகப்படுத்தியது. 4 வால்வ் இன்ஜின், அதிக பவர் மற்றும் வைப்ரேஷன் இல்லாத இன்ஜின் என பல அப்டேட்டுகளை அப்பாச்சி 160 பைக்கில் கொடுத்திருந்தது. புது பைக் வந்தாலும், பழைய அப்பாச்சி 160 பைக்கின் விற்பனை தொடரும் என்று கூறியிருந்த நிலையில் தற்போது புதிய நிறத்தை வெளியிட்டுள்ளது. 
 
- ரஞ்சித் ரூஸோ.
 
TAGS :   டிவிஎஸ், அப்பாச்சி 160, ரேஸ் எடிஷன்