அதிவேக மின்சார கார்களை உருவாக்கவுள்ள மஹிந்திராவின் புதிய நிறுவனம்...
Posted Date : 06:11 (14/04/2018)
Last Updated : 13:46 (14/04/2018)

 மஹிந்திரா & மஹிந்திரா நிறுவனம் அதிவேக மின்சார கார்களை தயாரிக்க புதிய நிறுவனத்தைத் தொடங்கியுள்ளது. ஆட்டோமொபிலி பின்னின்ஃபரினா எனும் இந்த நிறுவனம் புதிதாக அதிகவேக சொகுசு மின்சார வாகனங்களை வடிவமைத்து, உற்பத்தி செய்யும் என்று கூறியுள்ளனர்.

மஹிந்திரா மின்சார கார் 

ஆடி இந்தியாவின் முன்னால் தலைவர் மைக்கல் போர்ஷிகி, இந்த புதிய நிறுவனத்தின் தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இந்நிறுவனத்தின் முதல் கார் 2020-ம் ஆண்டு வரவுள்ளது. வெறும் 100 கார்கள் மட்டுமே விற்பனை செய்யப்படவுள்ளது. 100 கி.மீ வேகத்தை 2 நொடிகளிலும், 300 கி.மீ வேகத்தை 12 நொடிகளிலும் அதிகபட்சம் 400 கி.மீ வேகமும் போகக்கூடியதாக இருக்கும். இந்தாலிய நிறுவனமாகவே இயங்கவிருக்கும் பின்னின்ஃபரினா புகாட்டி சிரான் காருடன் போட்டிபோடவுள்ளது. ஒரு முறை சார்ஜ் செய்தால் 500 கி.மீ தூரம் வரை போகும்விதமாக இந்தக் காரை தயாரிக்க முடிவுசெய்யப்பட்டுள்ளது.பின்னின்ஃபரினா லேகோ மட்டுமே காரில் பயன்படுத்தப்படவுள்ளது. உலகம் முழுவதும் விற்பனைக்குக் கொண்டுவரவிருக்கும் இந்த காரின் விலை 16 கோடி ரூபாய்க்கு (2 மில்லியன் யூரோ) குறைவாகவே இருக்கும் என்று மைக்கல் போர்ஷிகி கூறியுள்ளார். லம்போர்கினி உரு ஸ் காருடன் போட்டிபோட எஸ்யூவி கார் ஒன்றையும் உருவாக்கத் திட்டமிட்டுள்ளது மஹிந்திரா நிறுவனம். 
மஹிந்திரா மின்சார கார்

ரோம் நகரில் நடைபெற்ற Formula-E பந்தயத்தின் முடிவில் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது மஹிந்திரா. அடுத்த ஆண்டின் மஹிந்திராவின் பந்தய கார்களில் தற்போது இருக்கும் சிகப்பு நிறம் பின்னின்ஃபரினா நிறுவனத்தின் வண்ணங்களுக்கு மாற்றப்படப்போகிறது. ஃபார்முலா-E கார் பந்தயத்தில் மஹிந்திரா முன்னிலையான நிறுவனம் என்பதால் அந்தத் தொழில்நுட்பங்களை புதிதாக வரப்போகும் கார்களில் கொண்டுவரும் என்று எதிர்பார்ப்புகள் உள்ளது. மஹிந்திராவின் ஃபார்முலா-E "தற்போது டெஸ்லா மாடல் 3 காருக்கு போட்டியாகக் காரை வெளியிடும் எண்ணம் இல்லை" என்று ஆனந்த் மஹிந்திரா கூறியுள்ளார்.
 - ரஞ்சித் ரூஸோ.
TAGS :   மஹிந்திரா, மின்சார கார், பின்னின்ஃபரினா, ஆனந்த் மஹிந்திரா