கார், பைக்குகளின் அதிகபட்ச வேகத்தை உயர்த்தியது மத்திய அரசு
Posted Date : 11:20 (16/04/2018)
Last Updated : 11:20 (16/04/2018)

 

 
மத்திய அரசு நெடுஞ்சாலைகளுக்கான அதிகபட்ச வேகத்தை உயர்த்தியுள்ளது. மத்திய நெடுஞ்சாலைதுறை அளித்த தகவலின்படி கார்களின் அதிகபட்ச வேகம் விரைவுச் சாலைகளில் மணிக்கு 120 கி.மீ என்றும், தேசிய நெடுஞ்சாலையில் மணிக்கு 100 கி.மீ என்றும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கார்களுக்கு மட்டுமல்ல, பைக்குகளுக்கும் அதிகபட்ச வேகம் 70 கி.மீயாக மாற்றப்பட்டுள்ளது. இது முன்பு இருந்ததை விட 20 கி.மீ அதிக வேகம். டாக்ஸியை பொருத்தவரை 100 கி.மீ என்பது அதிகபட்ச வேகமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. முன்பு இருந்ததைவிட விரைவுசாலைகளில் 20 கி.மீயும், தேசிய நெடுஞ்சாலைகளுக்கு 10 கி.மீ வேகமும் அதிகரிக்கப்பட்டுள்ளன. 
 
நெடுஞ்சாலை
 
நகரச்சாலைகளைப் பொருத்தவரை, கார் மற்றும் டாக்ஸிகளுக்கு அதே 70 கி.மீ வேகம்தான் இப்போதும். ஆனால், பைக்குகளுக்கு 20 கி.மீ அதிகரிக்கப்பட்டு தற்போது மணிக்கு 60 கி.மீ வேகம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. நெடுஞ்சாலையின் சில பகுதிகளுக்கு மட்டுமே இது பொருந்தும். வழக்கம்போல, மருத்துவமனை, பள்ளிக்கூடம், பார்க் போன்ற மக்கள் நடமாடும் பகுதிகள் இருக்கும்பட்சத்தில் அங்கு நிர்ணயிக்கப்பட்டிருக்கும் அதிகபட்ச வேகம்தான் பொருந்தும். சில சாலைகளில் வளைவுகள் அதிகம் காணப்படும் இடம் வரும்போது, அங்கு அதிகபட்ச வேகம் மாற்றியமைக்கப்பட்டிருக்கும். அப்போது இந்த விதி செல்லாது. மேலும், கிராமங்களைக் கடந்துபோகும் நெடுஞ்சாலை பகுதிகளில் மாநில அரசுகள் நிர்ணயிக்கும் வேகம்தான் பின்பற்றவேண்டும். 
 
- ரஞ்சித் ரூஸோ.

 

TAGS :   கார், பைக், நெடுஞ்சாலை, விரைவுசாலை, மத்திய அரசு