பைக் தயாரிக்க சூரிய ஒளி மின்சாரம்... யமஹாவின் சோலார் பவர் பிளான்ட்
Posted Date : 15:20 (16/04/2018)
Last Updated : 15:31 (16/04/2018)
 
சென்னையில் உள்ள யமஹா இந்தியாவின் பைக் தொழிற்சாலையில் 1100 KW மின்சாரம் உற்பத்தி செய்யக்கூடிய சோலார் மின்சார நிலையத்தை உருவாக்கியுள்ளனர். தற்போது உருவாக்கியுள்ள புதிய நிலையத்தைச் சேர்த்து யமஹா 1450 KW மின்சாரத்தைச் சூரிய ஒளியின் மூலம் உற்பத்தி செய்கிறது. இந்த ஆண்டு முடிவதற்குள் இந்த அளவை 3500 KW என உயர்த்த உத்தேசித்துள்ளது. 
 
 

 
ரூஃப் டாப், இன்ஜின் கட்டடம், பஸ் பார்க்கிங், நடைமேடை போன்ற இடங்களில் சோலார் பேனல்களை வைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் வருடத்துக்கு 1600 டன் கார்பன் எமிஷனை குறைக்கிறது. 2015-ம் ஆண்டில் சென்னை தொழிற்சாலையை உருவாக்கும்போதே, ஸ்பேர் பார்ட்ஸ் கட்டடத்திலும் R&D கட்டடத்திலும் 190 KW மற்றும் 140 KW மின்சாரம் தயாரிக்கக்கூடிய சோலார் பேனல்களை பொருத்தியிருந்தது. அதுமட்டுமல்ல அணைத்து கட்டடங்களும் சோலார் பேனல்களை பொருத்தும்விதம் கட்டப்பட்டுள்ளதாகவும் தெரிவித்திருந்தது. இந்தத் தொழிற்சாலையில் தண்ணீர் மறுசுழற்சி முறையில் பயன்படுத்தப்படுவதால் 1 சதவிகிதம் கூட வீணாவதில்லை என்று கூறுகிறார்கள். 
 
ஆட்டோமொபைல் தொழிற்சாலை அந்தப் பகுதியின் வளங்களை அதிகம் பயன்படுத்தும் என்பது உண்மை. இது போன்ற புதுப்பிக்கத்தக்க ஆற்றல்களைப் பயன்படுத்துவதால் அந்தப் பகுதியில் உள்ள வளங்கள் பாதுகாக்கப்படும்.
 
- ரஞ்சித் ரூஸோ.
 
TAGS :   யமஹா, யமஹா R15, யமஹா ஃபேஸினோ