இரண்டு புதிய நிறங்களில் டிவிஎஸ் என்டார்க் 125
Posted Date : 21:50 (16/04/2018)
Last Updated : 10:35 (17/04/2018)

 

இந்தியாவின் முதல் ப்ளூடூத் ஸ்கூட்டரான என்டார்க் இப்போது இரண்டு புதிய நிறங்களில் வந்துள்ளது.  Metallic Blue மற்றும் Metallic Grey என இரண்டு புதிய மெட்டாலிக் நிறங்களுடன் சேர்த்து மஞ்சள், சிவப்பு, வெள்ளை, பச்சை என நான்கு மேட் நிறங்களிலும் வருகிறது டிவிஎஸ் என்டார்க். புதிய நிறங்களுக்கு எந்த கூடுதல் விலையும் இல்லை. தற்போது டிவிஎஸ் என்டார்க்கின் சென்னை ஆன்-ரோடு விலை ரூ.74,772.

 

டிவிஎஸ் என்டார்க்
 


நிறங்களை தவிர பைக்கில் வேறு எந்த மாற்றமும் இல்லை. மேட் நிறங்கள் பிடிக்காதவர்களுக்கு இந்த மெட்டாலிக் நிறங்களை டிவிஎஸ் வெளியிட்டுள்ளது. போன்களில் ஸ்மார்ட்போன் மாதிரி, ஸ்கூட்டர்களில் இது ஸ்மார்ட் ஸ்கூட்டர். அதற்குக் காரணம் இந்தியாவிலேயே ப்ளூடூத் வசதி மற்றும் நேவிகேஷன் வசதி உள்ள முதல் ஸ்கூட்டர் என்டார்க்தான். ஸ்கூட்டரை ப்ளூடூத் உதவியால் மொபைல் போனுடன் இணைக்கலாம். இதன்மூலம் மொபைல் பேட்டரி ஸ்டேட்டஸ், சிக்னல் ஸ்டேட்டஸ், இன்கமிங் கால், மிஸ்டு கால், மெசேஜ் போன்றவற்றையும் பார்க்கலாம் ஆனால், பதிலளிக்க முடியாது. மேப் சேவையையும் அளிக்கிறது டிவிஎஸ். இடத்தை மொபைலில் பதிவு செய்தால், ரூட்டை ஸ்கூட்டரே காண்பிக்கும். என்டார்க்கில் இருப்பது டிவிஎஸ்ஸின் முற்றிலும் புதிய சிங்கிள் சிலிண்டர், 124.79 சிசி,  3 வால்வ்  இன்ஜின். 9.5bhp பவரும், 1.07kgm டார்க்கும் கிடைக்கிறது. பெரிய ஸ்கூட்டர் என்பதால் எடையும் கொஞ்சம் அதிகம். 166 கிலோ. ஹோண்டா க்ராஸியா மற்றும் அப்ரிலியா SR 125 ஸ்கோவ்ட்டர்களுடன் போட்டிபோடுகிறது டிவிஎஸ் என்டார்க்.

என்டார்க் ரிவ்யூவை படிக்க இங்கே க்ளிக் செய்யவும்.

- ரஞ்சித் ரூஸோ.

 

 

TAGS :   டிவிஎஸ், என்டார்க், ப்ளூடூத் ஸ்கூட்டர், India's First, 125cc Scooter