பல்ஸர் 150 பைக்கின் டூயல் டிஸ்க் வேரியன்ட் வெளியானது...
Posted Date : 12:36 (19/04/2018)
Last Updated : 14:29 (19/04/2018)
 
பஜாஜ் பல்ஸர் 150 பைக்கின் டூயல் டிஸ்க் வேரியன்ட் வெளியானது. இதுவரை முன்பக்க டிஸ்க் பிரேக் மட்டுமே இருந்த நிலையில் இப்போது பல்ஸர் 150 பைக்கில் பின்பக்க டிஸ்க் பிரேக்கும் வந்துவிட்டது. டிஸ்க் பிரேக் மட்டுமல்ல பைக்கின் தோற்றமும் கொஞ்சம் மாறியுள்ளது. 
 
பஜாஜ் பல்ஸர் 150

பல்ஸர் 150 பைக்கில் இதுவரை வந்துகொண்டிருந்த 240 mm முன்பக்க டிஸ்க் பிரேக் புதிய பல்ஸரில் 260 mm அளவாகப் பெருத்திருக்கிறது. பின் பக்கம் டிரம் பிரேக் போய்விட்டது. 230 mm டிஸ்க் பிரேக் வந்துவிட்டது. ஏப்ரல் 1-ம் தேதிக்குப் பிறகு 125 cc மேல் உள்ள பைக்குகளில் ஏபிஎஸ் கட்டாயமாக்கப்பட்டுவிட்டது. அதனால், சில டீவர்களில் மட்டும் புக்கிங்குகளை மார்ச் மாத இறுதியில் தொடங்கிவிட்டு பைக்கை இப்போதுதான் வெளியிடுகிறது. இரண்டு டிஸ்க் பிரேக்குகள் மட்டுமல்லாமல் பல்ஸர் 180 பைக்கின் 37 mm ஃபோர்க்குகள், ஸ்பிலிட் சீட், ஸ்பிலிட் கிராம் ரயில் வந்துள்ளன. இந்த பைக்கில் இருக்கும் அலுமினியம் ஃபினிஷ் ஃபூட் பெக், மேட் பிளாக் நிறத்தில் 17 இன்ச் அலாய் வீல்கள் இதுவரை பல்ஸர் 150 பைக்கில் இல்லாதவை. 
 
பஜாஜ் பல்ஸர் 150
(180 போலவே இருக்கும் பல்ஸர் 150)

இன்ஜினை பொருத்தவரை அதே 149சிசி டிவின் ஸ்பார்க் இன்ஜின்தான். 14 bhp பவர் மற்றும் 1.34 kgm டார்க் தருகிறது. இந்த அண்டின் தொடக்கத்தில் வெளியான டிஸ்கவர், அவென்ஜர் போல புதிய பல்ஸரிலும் வைப்ரேஷனை குறைத்திருப்பதாகக் கூறியுள்ளார்கள் பஜாஜ் நிறுவனத்தினர். வந்திருக்கும் புதிய பல்ஸர் 150 பைக்கின் சென்னை ஆன்-ரோடு விலை தோராயமாக ரூ.89,200. இது ஹோண்டா யூனிகார்க் 160 விட அதிகம். ஆனால், ஹோண்டா  X-Blade பைக்கை விட விலை குறைவு.
 
 
பஜாஜ் பல்ஸர் 180
(பல்ஸர் 180)
 

இந்தியாலிலேயே டூவிலர் விற்பனையில் முதல் 10 இடங்களுக்குள் இருக்கும் ஒரே 150 சிசி பைக் பல்ஸர்தான். பல்ஸர் 150 பைக், பஜாஜின் அக்‌ஷயபாத்திரமாக இருக்கிறது. எத்தனை பைக்குகள் வந்தாலும் இந்த பல்ஸர் 150 மேல் உள்ள மோகம் மக்களுக்குக் குறைவதில்லை. இதற்காகவே பஜாஜ் அவ்வப்போது பல்ஸர் 150 பைக்கில் ஏதாவது அப்டேட்டுகளை தந்துகொண்டே இருக்கிறது. தற்போது பல்ஸர் 180-யின் தோற்றத்தில் பல்ஸர் 150 வந்துள்ளதால், 180 பைக்கின் தயாரிப்பு சீக்கிரமே நிறத்தப்படுவதற்கு வாய்ப்புகள் உள்ளது. 
TAGS :   பஜாஜ், பல்ஸர், பல்ஸர் 150, பல்ஸர் 180, பஜாஜ் பல்ஸர், இந்தயாவின் பைக்