வெளிவந்துவிட்டது புதிய BMW X3...
Posted Date : 17:14 (19/04/2018)
Last Updated : 10:50 (20/04/2018)

பிஎம்டபிள்யூ தனது மூன்றாம் தலைமுறை X3 மிட் சைஸ் எஸ்யூவியை இன்று அறிமுகப்படுத்தவுள்ளது. பிப்ரவரி மாதம் நடைபெற்ற `2018 டெல்லி ஆட்டோ எக்ஸ்போ'வில் முதல் முறை காட்சிப்படுத்தப்பட்ட X3 தற்போது முற்றிலும் புதிதாக பல மாற்றங்களோடு வந்துள்ளது. எப்படி இருக்கிறது X3 என்று பார்ப்போம்.

BMW X3

டிசைன்

காரை முதலில் பார்த்தவுடனேயே தோற்றத்தில் எந்த மாற்றமும் நிகழவில்லை என்று தோன்றும். ஆனால், காரை உற்றுப்பார்த்தால் கிரில்லிலிருந்து தனித்து நிற்கும் பெரிய LED  ஹெட்லைட், L வடிவ LED டெயில் லைட், பின்பக்க ஸ்பாய்லர், கட்டுமஸ்தான பானெட், பக்கவாட்டு பாடிலைன்கள் என வித்தியாசங்கள் தென்படும். பிஎம்டபிள்யூ கார்களுக்கே உரித்தான Kidney கிரில், இங்கே Active Louvers உடன் அகலமாக இருக்கிறது. புதிய Cluster Architecture (CLAR) பிளாட்ஃபார்மில் தயாராவதால் முந்தைய மாடலைவிடப் வீல்பேஸ் 54மிமீ முன்னேறியிருக்கிறது (2,864மிமீ). இடவசதியும் கொஞ்சம் பெருத்துவிட்டது.

பிஎம்டபிள்யூ  

 

காரின் அளவுகளிலும் மாற்றம் உள்ளது (61மிமீ கூடுதல் நீளம் - 4,716மிமீ, 17மிமீ கூடுதல் அகலம் - 1,897மிமீ, 16மிமீ கூடுதல் உயரம் - 1,676மிமீ). புதிதாக அலுமினியத்தால் ஆன கதவுகள் மற்றும் பானெட் - திடமான ஸ்டீல்லால் ஆன ஃப்ளோர் பேன் என எடை குறைவான உலோகங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளதால், காரின் எடை முன்பைவிட 55 கிலோ குறைந்துள்ளது. எடை குறைவு மட்டுமல்ல எடை மேலாண்மையும் இங்கு நடந்துள்ளது. 50:50 பாணியில் காரின் எடை, இரண்டு ஆக்ஸில்களுக்கும் சரிசமமாகப் கொடுக்கப்படுகிறது. காருக்கு அடியில் கிளாடிங்குகள் கூடுதல் ஏரோடயனமிக் அம்சம்.

 

இன்ஜின்

புதிய X3 எஸ்யூவி, 190bhp பவர் தரக்கூடிய 2.0 லிட்டர் xDrive20d டீசல் இன்ஜினுடன் வந்துள்ளது. வேறு எந்த இன்ஜின் ஆப்ஷன்களும் இல்லை. இந்த டர்போ இன்ஜின் 8 ஸ்பீடு ZF ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் உடன் கூட்டணிவைத்துள்ளது. 2020-ம் ஆண்டில் வரவிருக்கும் BS-6 மாசு விதிகளை மனதில்வைத்து, 2.0 லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜின் - எலெக்ட்ரிக் மோட்டார் கூட்டணியில் ஹைபிரீடு மாடலை எதிர்காலத்தில் வெளியிட வாய்ப்புகள் உள்ளது. 

 

சிறப்பம்சங்கள்

புதிய X3, தொழில்நுட்பத்தில் அடுத்தகட்டத்தை எட்டியிருக்கிறது. காரின் உள்ளே Touch - Gesture - Voice கன்ட்ரோல்களுடன்கூடிய Floating பாணி 10.2 இன்ச் iDrive இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், 360 டிகிரி கேமரா, அடாப்டிவ் டேம்பர்கள், ஹெட்ஸ் அப் டிஸ்பிளே (HUD), 12.3 இன்ச் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்டர், அதிக ஸ்டோரேஜ் ஸ்பேஸ் ஆகியவை உள்ளன. இந்த வசதிகள் எல்லாம் பிஎம்டபிள்யூவின் 5 சீரிஸ் செடானில் இருந்து பெறப்பட்டுள்ளன. காரின் உள்ளே, வெளியே கணிசமான மாற்றங்கள் நிகழ்ந்திருப்பதால், தற்போதைய மாடலைவிட புதிய X3 எஸ்யூவியின் விலையும் கொஞ்சம் கூடிவிட்டது. Expedition  மற்றும் Luxury Line என இரண்டு வேரியன்டுகளாக வந்துள்ள X3 காரின் விலை  ரூ.49, 99,000 மற்றும் ரூ.56,70,000. அனைத்துமே எக்ஸ்ஷோரூம் விலைகள்.

 

BMW 

 

ஆடி Q5, மெர்சிடீஸ் பென்ஸ் GLC, லேண்ட் ரோவர் டிஸ்கவரி ஸ்போர்ட், லெக்ஸஸ் NX 300h ஆகிய லக்ஸூரி எஸ்யூவிகளுக்குப் போட்டியாக வந்திருக்கும் பிஎம்டபிள்யூ X3 காரின் விலை மற்றவைகளை விட குறைவு என்பது குறிப்பிடத்தக்கது. 

 

- ராகுல் சிவகுரு.

 
TAGS :   Bmw X3, பிஎம்டபிள்யூ, எஸ்யூவி, சென்னை பிஎம்டபிள்யூ, சச்சின்