தாமாக முன்வந்து மத்திய அரசின் உத்தரவை கடைபிடித்த நீதிபதிகள்...
Posted Date : 17:21 (20/04/2018)
Last Updated : 17:21 (20/04/2018)

நீதிபதிகளுக்கு அரசு சார்பில் வழங்கப்படும் கார்களில் பாதுகாப்புக்காக முன்பக்கமும் பின்பக்கமும் பெரிய இரும்பு கிராஷ் கார்டுகள் பொருத்தப்பட்டிருக்கும். சமீபத்தில் கிராஷ் கார்டுகளை பொருத்துவது தடைசெய்யப்பட்டதனால் நீதிமன்ற கார்களில் இருந்து கிராஷ் கார்டுகளை நீக்கச் சொல்லி சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி இந்திரா பேனர்ஜி நீதிமன்ற பதிவேட்டில் குறிப்பிட்டிருந்தார். 


கிராஷ் கார்டு


'நெடுஞ்சாலை அமைச்சகத்தில் உத்தரவுப் படி கிராஷ் கார்டுகள் பயன்படுத்துவது தடைசெய்யப்பட்டுள்ளது. கிராஷ் கார்டுகள் பயன்படுத்துவதால் ஏர்பேக் வேலைசெய்யாமல் போகலாம்.' என்று அனைத்து நீதிபதிகளுக்கும் ரிஜிஸ்டாரில் இருந்து கடிதம் சென்றுள்ளது. இதனையடுத்து உயர்நீதிமன்ற நீதிபதிகளின் கார்களில் இருந்து கிராஷ் கார்டு நீக்கப்பட்டுள்ளது. 


கிராஷ் கார்டு

நெடுஞ்சாலை துறை கடந்த டிசம்பர் 7, 2017 அன்று அனைத்துப் போக்குவரத்து செயலர்களுக்கும், ஆணையர்களுக்கும் அனுமதி இல்லாமல் கார்களில் கிராஷ் கார்டுகளை பொருத்துவதால் சாலையில் செல்பவருக்கும், கிராஷ் கார்டு பொருத்தியுள்ள வாகனத்தை ஓட்டுபவர் இருவருக்குமே ஆபத்துதான் அதனால் கிராஷ் கார்டுகளை கார்களில் பொருத்தக்கூடாது என்று உத்தரவு வெளியிட்டிருந்தனர். மேலும், கிராஷ் கார்டு மற்றும் புல் பார்களை பொருத்துவது மோட்டார் வாகன சட்டம் 1998, செக்‌ஷன் 52-ன் படி சட்டத்துக்கு புறம்பானது என்றும் செக்‌ஷன் 190 மற்றும் 191-ன் படி ரூ.1000 வரை அபராதம் விதிக்கப்படலாம் என்றும், இந்த பொறுப்பை மாநில அரசுகள் கவனிக்கவேண்டும் என்றும் அந்த உத்தரவில் குறிப்பிட்டிருந்தனர்.


கிராஷ் கார்டு

மாநில அரசிடம் இருந்த எந்த உத்தரவும் வராதநிலையில் தாமாக முன்வந்து உயர்நீதிமன்றமே இந்த உத்தரவைப் பின்பற்றியது மகிழ்ச்சிக்குரியது.

- ரஞ்சித் ரூஸோ.
TAGS :   கார், கிராஷ் கார்டு, சென்னை நீதிபதிகள்